பள்ளிப்பட்டு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பள்ளிப்பட்டு வட்டம்
Pallipat
town
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
ஏற்றம்154 m (505 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்8,650
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு631207
Telephone code(91)44 - 2784
வாகனப் பதிவுTN-20

தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]

தமிழ்நாடு - ஆந்திரப்பிரதேசம் எல்லையில் அமைந்த இந்த வட்டம் 5 உள்வட்டங்களும், 70 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

இவ்வட்டத்தில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் உள்ளது. பிப்ரவரி 2020-இல் இவ்வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிய ஆர். கே. பேட்டை வட்டம் உருவாக்கப்பட்டது. [3][4][5]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 214,073 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 107,698 ஆண்களும், 106,375 பெண்களும் உள்ளனர். 49,317 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 71% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.58% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 24133 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 909 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 48,058 மற்றும் 4,743 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.8% , இசுலாமியர்கள் 1.64% , கிறித்தவர்கள் 1.35% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவள்ளூர் மாவட்ட வட்டங்கள்
  2. வட்டத்தின் உள்வட்டங்களும், 87 வருவாய் கிராமங்களும்
  3. https://www.dinamani.com/tamilnadu/2019/feb/22/தமிழகத்தில்-புதிதாக-5-வருவாய்-வட்டங்கள்--முதல்வர்-பழனிசாமி-தொடங்கி-வைத்தார்-3100399.html தமிழ்நாட்டில் 5 புதிய வட்டங்கள் துவக்கம்]
  4. https://www.dinamani.com/tamilnadu/2014/sep/27/ஆர்.கே.பேட்டை-வட்டம்-உருவாக்-985919.html https://www.dinamani.com/tamilnadu/2014/sep/27/ஆர்.கே.பேட்டை-வட்டம்-உருவாக்]
  5. ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம்
  6. பள்ளிப்பட்டு வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்


[[

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிப்பட்டு_வட்டம்&oldid=3071777" இருந்து மீள்விக்கப்பட்டது