உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பாசூர்
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வாசீஸ்வரர், பசுபதீசுவரர், பாசூர்நாதர், உடையவர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:தங்காதலி(தம்காதலி), பசுபதி நாயகி, மோகனாம்பாள், பணை முலை நாச்சியார்
தல விருட்சம்:மூங்கில் (பாசு)
தீர்த்தம்:சோம தீர்த்தம் மற்றும் மங்கள தீர்த்தம்
ஆகமம்:காமீகம்
சிறப்பு திருவிழாக்கள்:பிரம்மோற்ஸவம், திருவாதிரை, சிவராத்திரி.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சுந்தரர், சம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கருவறை கஜப்பிரஷ்டம் (தூங்கானை மாடம்) அமைப்பு
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்

திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இச்சிவாலயத்தின் மூலவர் வாசீஸ்வரர், தாயார் தங்காதலி. பசு மூங்கில் புற்றில் பால் சொரிந்ததைக் கண்ட வேடர்கள் வெட்டிப்பார்த்தபோது சிவலிங்கம் வெளிப்பட்டதாக தலவரலாறு.[2]

தல வரலாறு

[தொகு]

இத்தலத்தில் சிவபெருமானை லிங்கமாகத் திருமால் வழிபட்டு மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார். இத்தலத்து சிவபெருமானுக்கு எண்ணெய்க்காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை[2]

கரிகாற் சோழன்

[தொகு]

சமணர்கள் கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் பெரிய நாகத்தை ஒரு குடத்தில் இட்டு அனுப்ப இத்தல சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம். இக்கோயிலை அமைக்க கரிகாலன் விரும்ப, அவன் மீது குறுநில மன்னன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை கரிகாற் சோழ மன்னன் மீது ஏவ சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கியதை நினைவூட்டுவதற்காக காளியின் சிற்பம் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் உள்ளது.[2]

அமைவிடம்

[தொகு]

இச்சிவாலயம் தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாசூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருவள்ளூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]
  1. பு. மா. ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 2.2 2.3 தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 21,22,23

வெளி இணைப்புகள்

[தொகு]