ஆவடி மாநகராட்சி
ஆவடி மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 17 சூன் 2019 |
தலைமை | |
மேயர் | ஜி. உதயகுமார், திமுக 4 மார்ச் 2022 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 48 |
அரசியல் குழுக்கள் | திமுக கூட்டணி 43 அதிமுக 4 சுயேச்சைகள் 1 |
ஆவடி மாநகராட்சி இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி நகராட்சியின் பகுதிகளை விரிவாக்கம் செய்து தமிழ்நாட்டின் 15ஆவதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சியாகும். 17 சூன் 2019 அன்று தமிழ்நாடு அரசு இதற்கான அவசர சட்டம் பிறப்பித்து அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.[1][2]
ஆவடி மாநகராட்சிப் பகுதிகள்
[தொகு]புதிதாக நிறுவப்படவுள்ள ஆவடி மாநகராட்சி, தற்போது உள்ள ஆவடி நகராட்சியின் 48 வார்டுகளும் மற்றும் அதற்குட்பட்ட திருமுல்லைவாசல், கோவில்பதாகை, மிட்டனமல்லி, பட்டாபிராம், பருத்திப்பட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் அடங்கும்.[3][4]
எதிர்காலத்தில் திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர், வானகரம், நெமிலிச்சேரி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சில பகுதிகளையும் மக்கள் கருத்து கேட்ட பிறகு ஆவடி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
ஆவடி மாநகராட்சி தேர்தல், 2022
[தொகு]2022-ஆம் ஆண்டில் ஆவடி மாநகராட்சியின் 48 மாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முதன்முறையாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 43 வார்டுகளையும், அதிமுக 4 வார்டுகளையும் மற்றும் சுயேச்சை 1 வார்டையும் கைப்பற்றியது. மேயர் தேர்தலில் திமுகவின் ஜி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். [5]
இதனையும் காண்க
[தொகு]- ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம்
- தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம்
- சென்னை மாநகரக் காவல் ஆணையரகம்
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Avadi becomes corporation
- ↑ Avadi becomes TN’s 15th municipal corporation
- ↑ 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு
- ↑ ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?
- ↑ ஆவடி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2022
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆவடி மாநகராட்சி: வளர்ச்சிப் பணிகளுக்கு வாய்ப்பு: அமைச்சர் பாண்டியராஜன்
- தரம் உயர்த்தி பல நாட்கள் ஆன நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலக பெயர் பலகையைமாற்ற பொதுமக்கள் கோரிக்கை