பொதட்டூர்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொதட்டூர்பேட்டை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 18 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

பொதட்டூர்பேட்டை (ஆங்கிலம்:Pothatturpettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.(தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது.) (ஆந்திரா மாநில எல்லைபகுதி ஆனால் ஆந்திரா மாநில பேருந்துகள் இயக்கபடுவதில்லை.)

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,698 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பொதட்டூர்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பொதட்டூர்பேட்டை மக்கள் தொகையில் 16% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

முக்கிய தொழில்[தொகு]

நெசவுத்தொழில் மிக முக்கியமான மற்றும் பெரும்பான்மையான மக்களால் செய்யப்படுகின்றது. கைத்தறி மற்றும் விசைத்தறி, இரண்டு வகையான நெசவும் இம்மக்கள் கையாண்டுவருகின்றனர். இங்கு நெய்யப்படும் உயர்தர கைலிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நெசவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயம் பெரும்பான்மையான தொழிலாக இருக்கிறது. நெல் மற்றும் கரும்பு முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.

மருத்துவம்[தொகு]

அரசு பொது மருத்துவமனையும் சில தனியார் மருத்துவமனைகளும் இயங்குகின்றன. அரசு மருத்துவமனை� 34 படுக்கை வசதிகளுடன் (ஆனால் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் அருவை சிகிச்சை வசதியின்றி) இயங்குகின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதட்டூர்பேட்டை&oldid=2554491" இருந்து மீள்விக்கப்பட்டது