திருவள்ளூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவள்ளூர் மாவட்டம்
India Tamil Nadu districts Tiruvallur.svg
திருவள்ளூர் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் திருவள்ளூர்
மிகப்பெரிய நகரம் ஆவடி
ஆட்சியர்
கே.வீரராகவராவ் இஆப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்


பரப்பளவு 3,394 சகிமீ
மக்கள்தொகை
37,28,104
வட்டங்கள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 14
நகராட்சிகள் 5
பேரூராட்சிகள் 9
ஊராட்சிகள் 526
வருவாய் கோட்டங்கள் 3
வருவாய் கிராமங்கள் 792
திருவள்ளூர் மாவட்ட இணையதளம் https://tiruvallur.nic.in

திருவள்ளூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். இது பழைய செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, சனவரி 1, 1997 அன்று உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவள்ளூர் ஆகும்.

வரலாறு[தொகு]

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டம் புதிய மாவட்டமாக, சூலை 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது, என்றாலும் 1997 சனவரி மாதம் முதல் தேதியிலிருந்து தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

3,394 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 3,728,104 ஆகும். அதில் ஆண்கள் 1,876,062 ஆகவும்; பெண்கள் 1,852,042 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 35.33% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,098 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 84.03% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 405,669 ஆகவுள்ளனர்.[1] இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 3,325,823 (89.21 %), இசுலாமியர் 143,093 (3.84 %), கிறித்தவர்கள் 233,633 (6.27 %), ஆகவும் உள்ளனர்.

மாவட்ட நிருவாகம்[தொகு]

மாவட்ட வருவாய் நிருவாகம்[தொகு]

மாவட்ட வருவாய் துறையின் 1 மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் 4 வருவாய் கோட்டங்கள், 10 வருவாய் வட்டங்கள், உள்வட்டங்கள், 792 வருவாய் கிராமங்கள் கொண்டது.[2]

வருவாய் வட்டங்கள்[தொகு]

 1. கும்மிடிப்பூண்டி வட்டம்
 2. திருவள்ளூர் வட்டம்
 3. பொன்னேரி வட்டம்
 4. பூந்தமல்லி வட்டம்
 5. திருத்தணி வட்டம்
 6. பள்ளிப்பட்டு வட்டம்
 7. ஊத்துக்கோட்டை வட்டம்

ஊராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம்[தொகு]

உள்ளாட்சித் துறையின் கீழ் 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் உள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 14 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 526 கிராம ஊராட்சிகள் உள்ளது. [3]

நகராட்சிகள்[தொகு]

 1. திருவள்ளூர்
 2. ஆவடி
 3. திருத்தணி
 4. பூந்தமல்லி
 5. திருவேற்காடு

பேரூராட்சிகள்[தொகு]

 1. செங்குன்றம்
 2. பொன்னேரி
 3. திருநின்றவூர்
 4. ஊத்துக்கோட்டை
 5. மீஞ்சூர்
 6. கும்மிடிப்பூண்டி
 7. பள்ளிப்பட்டு
 8. பொதட்டூர்பேட்டை
 9. திருமழிசை

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 1. திருத்தணி
 2. பள்ளிப்பட்டு
 3. வில்லிவாக்கம்
 4. புழல்
 5. சோழவரம்
 6. மீஞ்சூர்
 7. கும்மிடிப்பூண்டி
 8. எல்லப்புரம்
 9. பூண்டி
 10. திருவள்ளூர்
 11. பூந்தமல்லி
 12. கடம்பத்தூர்
 13. திருவாலஙகாடு
 14. ஆர்.கே. பேட்டை

அரசியல்[தொகு]

இம்மாவட்டத்தின் பகுதிகள் திருவள்ளூர், சென்னை வடக்கு, சிறீபெரும்புதூர் மற்றும் அரக்கோணம் என நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ளது. இம்மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]