பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
Appearance
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.
அமைவிடம்
[தொகு]சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையிலிருந்து தச்சூரிலிருந்து பழவேற்காடு-பொன்னேரி சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.
கோயில்
[தொகு]இந்தக் கோயிலில் உள்ள சிவனை அகத்தியர் வணங்கியதன் காரணமாக மூலவர் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்மன் ஆனந்தவல்லியம்மன். கோயில் பிரகாரத்தில் பழமையான புற்று ஒன்று காணப்படுகிறது. இங்கு அகத்திய தீர்த்தக்குளம் உள்ளது. இக்கோயிலின் இராஜகோபுரம் ஐந்து நிலை உடையது. தைப்பூசத்தையொட்டி இங்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.[1]