ஆவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆவடி
—  மாநகராட்சி  —
ஆவடி
இருப்பிடம்: ஆவடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 13°07′N 80°06′E / 13.12°N 80.1°E / 13.12; 80.1ஆள்கூறுகள்: 13°07′N 80°06′E / 13.12°N 80.1°E / 13.12; 80.1
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா, இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர் நாசர்
சட்டமன்றத் தொகுதி ஆவடி
சட்டமன்ற உறுப்பினர்

மாஃபா பாண்டியராஜன் (அதிமுக)

மக்கள் தொகை 3,44,701 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


17 மீட்டர்கள் (56 ft)

ஆவடி (ஆங்கிலம்:Avadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை மாநகரில் வடமேற்கில், அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியாகும்[4] மற்றும் புறநகர் குடியிருப்புகளில் ஒன்றாகும். ஆவடி மாநகராட்சி பகுதியில் திருமுல்லைவாசல் மாசிலாமணிஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது.

ஆவடி இராணுவ தளவாட ஆலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜீன் பீரங்கி

பெயர் காரணம்[தொகு]

ஆவடி( Avadi ) என்ற வார்த்தை ஆங்கிலத்தில் “Armoured Vehicles and Ammunition Depot of India” என்றவற்றின் சுருக்கம் ஆகும். 1960க்கு பிறகு இந்த நகர் வளர்ச்சி அடைந்தது. தமிழில் “ஆ“ என்றால் பசு என்று பொருள். இந்த நகர் நிறைய பசு நிறைந்த ஊர் என்பதால் ஆ+அடி=ஆவடி என்று கூறுவதுண்டு.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 13°07′N 80°06′E / 13.12°N 80.1°E / 13.12; 80.1 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஏரி[தொகு]

ஆவடி வீட்டு வசதி வாரியத்தின் பின்னால், 86 ஏக்கர் பரப்பில் பருத்திப்பட்டு ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு, 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, பசுமை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், 60,000 கனமீட்டர் தூர வாரப்பட்டு, 6 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க ஏரியின் சேமிப்பு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏரியைச் சுற்றி நடைபாதை, படகு குழாம், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, ஜூன், 21 ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டு விடப்பட்டுள்ளது.

இதுபோல், ஆவடியைச் சுற்றி விளிஞ்சியம்பாக்கம் ஏரி, அராபத் ஏரி, சித்தேரி உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகள் உள்ளன. அவைகள் குடியிருப்பு பெருக்கத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கழிவு நீர் கலக்கும் இடமாக உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,44,701 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஆவடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆவடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்விக்கூடங்கள்[தொகு]

 • ஆர். சி. எம். மேல்நிலைப் பள்ளி
 • இமாகுலேட் மேல்நிலைப் பள்ளி
 • எஸ். ஏ. பல்தொழில் நுட்பப் பயிலகம்
 • எஸ். ஏ. பொறியியல் கல்லூரி
 • கேந்திரிய வித்தியாலயா
 • நாசரேத் மெட்ரிகுலேஷன் பள்ளி
 • புனித ஆன்டனி பள்ளி
 • புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி
 • மகாலட்சுமி கலைக் கல்லூரி
 • விவேகானந்தா வித்தியாலயா
 • விஜயந்தா சீனியர் செகண்டரி பள்ளி
 • வெல்டெக் இன்ஜினிங் காலேஜ்
 • செயின் பீட்டர் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி
 • விஜயந்தா உயர் இரண்டாம்நிலை பள்ளி
 • விஜயந்தா மூத்த இரண்டாம் வகுப்பு

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. ஆவடி நகராட்சி
 5. "Avadi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
 6. [இந்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்புhttp://www.census.tn.nic.in/index.php?ppt2.php]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவடி&oldid=3007759" இருந்து மீள்விக்கப்பட்டது