மத்திய கைலாசம்

ஆள்கூறுகள்: 13°0′23″N 80°14′49″E / 13.00639°N 80.24694°E / 13.00639; 80.24694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்திய கைலாசம் (மத்திய கைலாஷ்) எனும் இந்துக் கோவிலானது தென்சென்னையில் அமைந்துள்ளது. இக்கோவில் சர்தார் வல்லபாய் படேல் சாலை, அடையாறு சாலை, இராஜீவ் காந்தி சாலை ஆகிய முச்சாலைகளின் சந்தியில் அமைந்துள்ளது. இது நடுவண் தோல் ஆய்வு நிறுவனம் எதிரிலும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது.

கோவில்[தொகு]

இக்கோவிலின் மூலவர் வெங்கட ஆனந்த பிள்ளையார் (விநாயகர்). கருவறையைச் சுற்றி சிவன், திருமால், உமை, சூரியன் ஆகியோரின் சிறு கோவில்களும் உள்ளன. மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனுமன், பொற்பைரவர், ஒன்பான்கோள் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

பிள்ளையார் சதுர்த்தி நாளில் சூரியனின் கதிர்கள் இப்பிள்ளையாரின் மேல் விழுவது இக்கோவிலின் சிறப்பு. பிள்ளையார் "ஓம்" எனும் மந்திரத்திற்குரியவர் என்பதாலும் இசையின் ஏழு சுரங்களையும் குறிக்கும் வகையில் இங்கு எட்டு மணிகள் நிறுவப்பட்டுள்ளன. (ச, ரி, க, ம, ப, த, நி, ச என்று முடிவதால் எட்டு என்று கொள்ளப்பட்டது.) இக்கோவிலிலுள்ள அத்யானந்த பிரபு எனும் அனுமனும் பிள்ளையாரும் சேர்ந்த கடவுள் உருவம் புகழ் பெற்றது.

பேருந்து நிறுத்தம்[தொகு]

மத்திய கைலாசப் பேருந்து நிறுத்தமானது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிறுத்தங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு உண்மையாக இரு பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஒன்று சர்தார் படேல் சாலையிலும் மற்றொன்று பழைய மாமல்லபுரச் சாலையின் துவக்கத்திலும் அமைந்துள்ளது. இவ்விரண்டிலும் முதலாவது முதன்மையானதாகும். ஏனெனில் அனைத்து மா.போ.க பேருந்துகளும் இங்கு நிற்கும். நடுவண் தோல் ஆய்வு நிறுவனம் (Central Leather Research Institute) எதிரில் அமைந்திருப்பதன் காரணமாக இப்பேருந்து நிறுத்தம் சுருக்கமாக சி.எல்.ஆர்.ஐ. பேருந்து நிறுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_கைலாசம்&oldid=3825305" இலிருந்து மீள்விக்கப்பட்டது