சென்னை விமானநிலைய மேம்பாலம்

ஆள்கூறுகள்: 12°58′54″N 80°10′01″E / 12.981569°N 80.166968°E / 12.981569; 80.166968
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை விமானநிலைய மேம்பாலம்
Chennai Airport Flyover
அமைவிடம்
சென்னை, இந்தியா
ஆள்கூறுகள்:12°58′54″N 80°10′01″E / 12.981569°N 80.166968°E / 12.981569; 80.166968
கட்டுமானம்
வகை:மேம்பாலம்
Spans:27
வழித்தடங்கள்:3, ஒருவழிப் பாதை சாலைப் போக்குவரத்து
அமைக்கப்பட்ட நாள்:2005–08 by இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
திறக்கப்பட்டது:அக்டோபர் 19, 2008 (2008-10-19)
அதிகூடிய
அகலம்:
11 மீட்டர்கள் (36 அடி)

சென்னை விமானநிலைய மேம்பாலம் (Chennai Airport Flyover) சென்னை நகரில் இருக்கும் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு முன்பாக சுமார்1.6 கி.மீ நீளமுள்ளதாக காணப்படுகிறது.. தாம்பரத்திலிருந்து கத்திப்பாரா சந்திப்புக்கு[1] அருகிலுள்ள ஆலந்தூருக்கு வரும் வாகனங்கள் செல்வதற்கான ஒருவழிப் பாதையாக இம்மேம்பாலம் திகழ்கிறது. 1.6 கிலோமீட்டர் நீளத்திற்கும் மூன்று வரைபாதை வசதியை கொண்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 970 மில்லியன் ரூபாய் செலவில் இம்மேம்பாலத்தைக் கட்டியுள்ளது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் நாள் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் இம்மேம்பாலம் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.[2]

தரைத்தளம் மற்றும் மேம்பாலம் முதலியவற்றை இணைக்கும் வகையில் நகரும் படிக்கட்டுகள், மின் ஏணிகள் போன்ற அதிநவீன வசதிகளை ஏற்படுத்த போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Flyover near airport opened". The Hindu (Chennai). 20 October 2008 இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081020131311/http://www.hindu.com/2008/10/20/stories/2008102057190100.htm. பார்த்த நாள்: 14 January 2012. 
  2. Gunasekaran, M. (14 October 2008). "Airport flyover to be thrown open on Sun". The Times of India (Chennai) இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023083806/http://articles.timesofindia.indiatimes.com/2008-10-14/chennai/27890215_1_kathipara-exclusive-lanes-lane-discipline. பார்த்த நாள்: 14 January 2012.