வெளி வட்டச் சாலை, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சென்னையின் உள் வட்டச் சாலை, புறவழிச் சாலை,மற்றும் வெளிவட்டச் சாலைகளைக் காட்டும் வரைபடம்.

வெளி வட்டச் சாலை (Outer Ring Road) சென்னை மாநகரப் பரப்பில் (CMA) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் நகரத்தினுள் பெரும் சரக்குந்துகள் வந்துசெல்வதைத் தவிர்க்கவும் வளரும் மாநகரப் போக்குவரத்தின் சீரான பரவலுக்கும் வகை செய்ய வளர்த்தெடுக்கப்படும் ஓர் முக்கிய போக்குவரத்து தடவழியாகும். இச் சாலை ஏறத்தாழ 62.3 கிமீ நீளமுள்ளது. இது தே.நெ 45ஐ வண்டலூரிலும், தே.நெ 4ஐ நாசரத்பேட்டையிலும், தே.நெ 205ஐ நெமிலிச்சேரி (திருநின்றவூர்), தே. நெ.5ஐ நல்லூரிலும் திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையை (டிபிபி சாலை) மீஞ்சூரிலும் இணைக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிலம், சாலை மற்றும் தொடர்வண்டி வழித்தடங்கள் அமைத்திட 72 மீ. அகலத்திற்கும் எதிர்காலத் தேவையாக மேலும் 50 மீ அகலத்திற்கும் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிக்கு 1081 கோடி ரூபாய்கள் திட்டச்செலவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரு கட்டங்களில் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டுள்ள இச்சாலைகளின் முதற்கட்டப் பணிகளை ஆகத்து 29, 2010இல் அன்றைய துணை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கால்கோளிட்டுத் துவங்கி வைத்தார். முதற்கட்டத்தில் வண்டலூரிலிருந்து நெமிலிச்சேரி வரை 30 கிமீ தொலைவிற்கு வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]