பூந்தமல்லி நெடுஞ்சாலை
Jump to navigation
Jump to search
பூந்தமல்லி நெடுஞ்சாலை (Poonamallee High Road) சென்னையையும் பூந்தமல்லியையும் இணைக்கும் ஒரு முக்கிய சாலை ஆகும். சென்னை மைய தொடருந்து நிலையம் அருகில் தொடங்கி கூவம் ஆற்றின் கரையில் மேற்காக போகும் இச்சாலை தேசிய நெடுஞ்சாலை 4 (என்.எச்.4)- ன் ஒரு பகுதியாகும்.
இணைப்பு[தொகு]
சென்னையின் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலைகளில் இதுவும் ஒன்று. இது சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் அருகே ராஜாஜி சாலையுடன் இணைகிறது. பூவிருந்தவல்லி அருகே தேசிய நெடுஞ்சாலை 4இல் முடிவடைகிறது. மேலும் சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் அருகே அமைந்துள்ள பாலம் வழியாக அண்ணா சாலையை இணைக்கிறது. 100 அடி சாலையை கோயம்பேடு சந்திப்பிலும் தேசிய நெடுஞ்சாலையை வானகரத்திலும் இணைக்கிறது.
இந்த சாலையில் அமைந்துள்ளவை[தொகு]
- சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்
- சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்
- சென்னை கோட்டை தொடருந்து நிலையம்
- சென்னை பூங்கா தொடருந்து நிலையம்
- ஈகா திரையரங்கம்
- ரோகிணி திரையரங்கம்
- சேத்துபட்டு சுற்றுசூழல் பூங்கா