மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய மாநில நெடுஞ்சாலை 49
49

மாநில நெடுஞ்சாலை 49
கிழக்குக் கடற்கரைச் சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு சாலை வளர்ச்சி நிறுவனம் [1]
நீளம்:690 km (430 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருவான்மியூர், சென்னை
To:புதுச்சேரி, காரைக்கால், இராமநாதபுரம், தூத்துக்குடி
Highway system
மா.நெ. 48மா.நெ. 49A

கிழக்குக் கடற்கரைச் சாலை (ஆங்கிலம்:East Coast Road) அல்லது மாநில நெடுஞ்சாலை 49 அல்லது எஸ்.எச்-49 முதல்கட்டத்தில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாநகரின் திருவான்மியூர் என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் கோட்டக்குப்பம் என்ற இடத்தையும் இணைக்கும் திருவான்மியூர் - மாமல்லபுரம் - புதுச்சேரி சாலை ஆகும். இதன் நீளம் 147.8 கிலோமீட்டர்கள் .

கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு காட்சி

கிழக்குக் கடற்கரைச் சாலை சென்னையையும் கடலூரையும் புதுச்சேரி வழியாக இணைக்கிறது. இச்சாலையில் விரைவு எல்லை ஒரு மணி நேரத்துக்கு 100 கிமீ ஆகும். இச்சாலையில் பல பொழுதுபோக்கு பூங்காகளும் சுற்றுலா ஈர்ப்புகளும் உள்ளன.

இச்சாலை வங்காள விரிகுடா கடற்கரை ஓரமாக தமிழகத்தின் தலைநகரம் சென்னையையும் கன்னியாகுமரி முனையையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டிணம், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், மணமேல்குடி, தொண்டி மற்றும் ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 690 கி.மீ தொலைவிற்கு இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  1. http://tnrdc.com/about/