ஆற்காடு சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆற்காடு சாலை (என். எஸ். கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) சாலை என்றும் அழைக்கப்படுகிறது), (SH-113) என்பது தமிழ்நாட்டின், சென்னை நகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இது 12 கி.மீ. நீளம் உள்ளது. 1940களின் ஆரம்பத்தில் இந்த சாலை நிர்மாணிக்கப்பட்டு, சென்னை நகரத்தின் மேற்குப் புறங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தது.[1]

சீரமைப்பு[தொகு]

ஆற்காடு சாலையின் 6 கி.மீ. பகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மீதமுள்ள 6 கி.மீ. திருவள்ளூர் மாவட்டத்தின் பூந்தமல்லி வட்டத்தில் அமைந்துள்ளது.

சென்னை சென்னை மெட்ரோ ரயில்வே லிமிடட், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் துறையுடன் இணைந்து 400 மீட்டர் நீள மேம்பாலத்தை, சென்னை உள் வட்டச்சாலையில், சென்னை வடக்கில் உள்ள ஆற்காடு சாலையின் சந்திப்பில் வடபழநியில் மெட்ரோ பாதைக்கு இரு பக்கத்திலும் அமைத்துள்ளது.[2][3][4]

நெடுஞ்சாலைத் துறையானது ஆற்காடு சாலையின் சந்திப்பில் போரூர் அருகே மவுண்ட்-பூந்தமல்லி சாலைக்கு மற்றொரு மேம்மாலம் அமைக்கிறது.[5]

ஆற்காடு சாலை வழியாகச் சென்றடையும் புறநகர் பகுதிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்காடு_சாலை&oldid=3019927" இருந்து மீள்விக்கப்பட்டது