எல்லீஸ் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்லீஸ் சாலை (Ellis Road) என்பது சென்னையில் ஒரு முக்கிய சாலை ஆகும். இந்த சாலை அண்ணா சாலையும் வாலாஜா சாலை கிண்டியையும் சந்திக்கும் புள்ளிக்கு அருகில் உள்ளது. அதன் மறுமுனை திருவல்லிக்கேணி பாரதி சாலைக்கு அருகில் சென்று முடிகிறது. இந்தச் சாலை உள்ள இந்தப் பகுதி எல்லீஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது. இச்சாலையானது ஒளிப்படக்கருவிகள், ஒளிப்பட சட்டங்கள், விளையாட்டுக் கேடயங்கள் போன்றவற்றுக்கான தமிழ்நாடு அளவிலான சந்தையாக மாறியிருக்கிறது. மேலும் இச்சாலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஒளிப்படக் கலைஞர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்க வருகிறார்கள். நிறுவனப் பெயர்ப் பலகை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தச் சாலையில் மிகுதியாக உள்ளன. தி இந்து (தமிழ்) அலுவலகமும் இந்தச் சாலையின் தொடக்கத்திலே உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1810 இல் சென்னை மாகாண ஆட்சியராக இருந்தவரும், தமிழறிஞருமான எல்லீசனின் நினைவில் இச்சாலைக்கு அவர் பெயர்வைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜெய் (23 செப்டம்பர் 2017). "ஆங்கிலேயத் தமிழறிஞரின் சாலை". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லீஸ்_சாலை&oldid=3579580" இலிருந்து மீள்விக்கப்பட்டது