மத்திய சதுக்கம், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மத்திய சதுக்கம், சென்னை (Central Square, Chennai) என்பது, சென்னையில் உள்ள பூங்கா நகரில் வரவிருக்கும் முக்கிய குறுக்குச் சாலைகள் அமைக்கும் திட்டமாகும். ரிப்பன் கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், விக்டோரியா நகர அரங்கம், மூர் மார்க்கெட் வளாகம், தென்னக இரயில்வேயின் தலைமை இடமான சென்னை சென்ட்ரல் மற்றும் அரசு பொது மருத்துவமணை ஆகிய பகுதிகள் மத்திய சதுக்கம் திட்டத்தில் விரிவுபடுத்தப்படும் பகுதிகளாக உள்ளன. 4 பில்லியன் ரூபாய் செலவு பிடிக்கும் என இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை மெட்ரோ திட்டம் ஆகியன கூட்டாக இணைந்து மத்திய சதுக்கம், சென்னை, திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குகின்றன.[1][2]

பூங்கா நகரிலுள்ள பூந்தமல்லி பிரதான சாலையின் நெரிசலை குறைப்பதும் நகரத்தின் பல்வேறு வாகனப் போக்குவரத்தையும் ஒருங்கிணைக்கவும் இந்த மத்திய சதுக்கம் என்ற திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிரது.

மேற்கோள்கள்[தொகு]