செயிண்ட் மேரீஸ் சாலை
Jump to navigation
Jump to search
செயிண்ட் மேரீஸ் சாலை சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஒரு முக்கிய சாலையாகும். இந்தச் சாலை "பார்க் ஷெரட்டன்" உணவகத்திலிருந்து துவங்கி, மந்தைவெளியிலுள்ள தேவநாதன் சாலை வரை செல்கின்றது. இந்தச் சாலையில் குடியிருக்கும் சில பிரபலங்கள் முன்னாள் தலைமத் தேர்தல் ஆணையர் சேசன், பொள்ளாச்சி சக்தி மகாலிங்கம், காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் நாகேஷ் போன்றோர் அடங்குகிறார்கள். செயிண்ட் மேரீஸ் சாலையில் இருக்கும் மாநகராட்சி விளையாட்டு மைதானம் புகழ் பெற்றது. சென்னை-600028 என்ற தமிழ்த் திரைப்படம் இந்த மைதானத்தில் நடைபெற்ற காட்சிகளை நினவுகூறி எடுக்கப்பட்டது.