நுங்கம்பாக்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நுங்கம்பாக்கம் நுங்கை | |
---|---|
Country | இந்தியா |
State | தமிழ்நாடு |
District | சென்னை மாவட்டம் |
Metro | Chennai |
அரசு | |
• Body | சென்னை மாநகராட்சி |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 600034 |
Planning agency | CMDA |
Civic agency | சென்னை மாநகராட்சி |
இணையதளம் | www.chennai.tn.nic.in |
நுங்கம்பாக்கம், சென்னை மாநகராட்சியின் பழமையான மற்றும் வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்று. நுங்கம்பாக்கம், சென்னையின் முக்கியமான வணிக/வர்த்தக மையமாகும். நுங்கம்பாக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. நுங்கம்பாக்கம், மத்தியச் சென்னையில் அமைந்துள்ளது. எழும்பூர், சேத்துப்பட்டு, தியாகராய நகர், கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் கீழ்ப்பாக்கம் என்று சென்னையின் பிற பகுதிகளுடன் தன் எல்லைகளைக் கொண்டது நுங்கம்பாக்கம். நுங்கம்பாக்கம், பல்வேறு வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள், மருத்துவமனைகள், சுகாதார மையங்களைக் கொண்டுள்ளது. ராசேந்திர சோழனின் கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாலங்காடு செப்புப் பட்டயத்தில் நுங்கம்பாக்கத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சென்னையின் பல முக்கிய இடங்களை இணைக்கும் பகுதியாக நுங்கம்பாக்கம் விளங்குகிறது. சென்னை மாநகரப் போக்குவரத்து பேருந்துகள் இவ்வழியே இயக்க படுகின்றன. மேலும் நுங்கம்பாக்கத்தில், கடற்கரை- தாம்பரம் மார்க்க புறநகர் மின்தொடர் வண்டி நிலையம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
முக்கிய சாலைகள் : கல்லூரி சாலை, ஸ்டெர்லிங் சாலை, நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, மஹாலிங்கபுரம் பிரதான சாலை, ஷெனாய் சாலை, கே என் கே சாலை, வாலஸ் கார்டன், ஹாடோவ்ஸ் சாலை, புஷ்பா நகர் பிரதான சாலை, கோத்தாரி சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை, ஜகந்நாதன் சாலை, லேக் ஏரியா பிரதான சாலை.
முக்கிய இடங்கள் :[தொகு]
அரசு அலுவலகங்கள் :[தொகு]
பொது வழிமுறை வளாகம்- DPI இங்கு அமைந்துள்ளது. இவ்வளாகத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம், பள்ளி கல்வி இயக்குனரகம், தமிழ் நாடு பாடநூல் கழகம் இருக்கின்றன.
இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அலுவலகம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஊழியர் அரசு காப்பீட்டு நிறுவனம் ESI Corporation (பிராந்திய அலுவலகம்), ஸ்டெர்லிங் சாலையில் உள்ளது.
பல்வேறு நடுவண் அரசு அலுவலகங்களைக் கொண்ட சாஸ்திரி பவன் வளாகம், மகளிர் மேம்பாட்டு கழகம், வருமான வரி அலுவலகம், தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தின் (ESIC) மண்டல அலுவலகம், சுங்கவரி அலுவலகம், கடவுச்சீட்டு அலுவலகம் போன்ற ஒன்றிய அரசு அலுவகங்கள், இந்து அறநிலையத்துறை அலுவலகம் ஆகியவை நுங்கம்பாக்கத்தில் தான் உள்ளன.
வங்கிகள்/ வணிக நிறுவனங்கள் :[தொகு]
இப்பகுதியில் பல வங்கிகள் தங்கள் சேவைகளை அளிக்கின்றன. ஸ்டாண்டர்ட் சார்டர்ட் , டாய்ஷ் பேங்க், ஆர் பி எல், ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ, எஸ், இண்டஸ் இன்ட் போன்ற பன்னாட்டு/தனியார் வங்கிகளும், பல்வேறு பொதுத்துறை வங்கிகளும், நபார்டு வங்கியின் தமிழ்நாடு மாநில அலுவலகமும் இப்பகுதியில் தங்கள் கிளைகளைத் திறந்து இருக்கிறார்கள். ஸ்டார் நலக்காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழ்நாடு மாநில அலுவலகம் ஆகியவை நுங்கம்பாக்கத்தில் அமைத்து இருக்கின்றன.
அடிடாஸ், புமா, நிக்கே, ரீபாக், பேசிக்ஸ், க்ரோமா போன்ற உயர்ரக கடைகள் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன.
ஹோட்டல்/ உணவகங்கள் :[தொகு]
தாஜ் கோரமன்டல், தி பார்க், பால்ம்க்ரோவ், பிரதாப் பிளாசா, ஹாரிசன்ஸ், கௌதம் மேனர் போன்ற நட்சத்திர ஹோட்டல்களும். கான்டன், சிக் கிங், கே எப் சி, கஃபே காபி டே, மாமா கோடோ, டாலியா அஞ்சப்பர், தலைப்பா கட்டி, ஆசிப், வேலு மிலிட்டரி உணவகங்கள் அமைந்துள்ளன.
கல்வி நிறுவனங்கள் :[தொகு]
லயோலா கல்லூரி, மகளிர் கிறித்தவக் கல்லூரி, எம் ஓ பி வைஷ்ணவ, நிறுவன செயலாளர் பயிற்று நிறுவனம், பட்டய கணக்காளர் பயிற்று நிறுவனங்களும், மாநகராட்சி ஆண்கள் & பெண்கள் பள்ளிகள், குட் ஷெப்பர்ட், க்ரஸண்ட், பத்மா சேஷாத்ரி பள்ளிகளும், மாக்ஸ் முல்லர் பவன், அல்லியன்ஸ் பிரான்சைஸ் மொழி பயிற்று நிறுவனங்களும் இங்கமைந்துள்ளன.
நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம்:[தொகு]
சர்வதேச தரத்திலான இந்த அரங்கம், நுங்கம்பாக்கத்தின் பெருமைமிகு அடையாளமாகும்.
அமைவிடம்[தொகு]
நுங்கம்பாக்கத்தின்அருகில் அமைந்துள்ள இடங்கள்:
![]() |
அமைந்தக்கரை | சேத்துப்பட்டு (சென்னை) | எழும்பூர் | ![]() |
சூளைமேடு | ![]() |
ஆயிரம் விளக்கு | ||
| ||||
![]() | ||||
கோடம்பாக்கம் | தியாகராய நகர் | தேனாம்பேட்டை |