உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 68 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 68
68

தேசிய நெடுஞ்சாலை 68
இந்தியச் சாலை வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 68 தடித்த நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.
வழித்தட தகவல்கள்
நீளம்:134 km (83 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:உளுந்தூர்பேட்டை, தமிழ்நாடு
மேற்கு முடிவு:சேலம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி - ஆத்தூர் - வாழப்பாடி - சேலம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 67 தே.நெ. 69

தேசிய நெடுஞ்சாலை 68 (NH 68) முழுமையும் தமிழ்நாட்டிற்குள் அமைந்துள்ள ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது உளுந்தூர்பேட்டை க்கும் சேலத்திற்கும் இடையே 134 km (83 mi) தொலைவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.[1] இது தே.நெ ஏழுடனும் தே.நெ நாற்பத்தேழுடனும் சேலத்தில் இணைகிறது. அதேபோன்று தே.நெ.68 தே.நெ 45 மற்றும் மாநில நெடுஞ்சாலை 69 உடன் உளுந்தூர்பேட்டையில் சந்திக்கிறது. இருவழிப்பாதையாக இரு கட்டங்களில் ரிலையன்சு இன்ப்ரா மற்றும் மேதாசினால் கட்டமைக்கப்பட்டது.[2]

போக்குவரத்து

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 68 சேலத்தையும் மறைமுகமாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரையும் சென்னையுடன் இணைக்கும் வழித்தடமாக உள்ளது.

வழித்தடம்

[தொகு]

உளுந்தூர்பேட்டை, எளவனசூர், தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தலைவாசல், காட்டுக்கோட்டை, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி & சேலம்

சான்றுகோள்கள்

[தொகு]
  1. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India
  2. R, Ilangovan (2009-03-19). "Satyam fiasco affects NH-68 works" (in English). Salem: தி இந்து இம் மூலத்தில் இருந்து 2009-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091119211020/http://www.hindu.com/2009/03/19/stories/2009031954420500.htm. பார்த்த நாள்: 13 May 2012.