தேசிய நெடுஞ்சாலை 181 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 181 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 211 km (131 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | கோயம்புத்தூர், தமிழ்நாடு | |||
South முடிவு: | குண்டலுபேட்டை, கர்நாடகம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 156 km (97 mi) கர்நாடகம்: 55 km (34 mi) | |||
முதன்மை இலக்குகள்: | கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் - குண்டலுபேட்டை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 181 (National Highway 181 (India)), பொதுவாக தே. நெ. 181 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் நகரத்தைத் தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்ட்லுப்பேட்டையுடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1] மைசூர் நகரம் ஊட்டியுடன் நஞ்சனகூடு, குண்டலுபேட்டை, பந்திப்பூர் மற்றும் கூடலூர் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 181 பந்திப்பூர் புலிகள் காப்பகம் (தேசிய பூங்கா) மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் வழியாகச் செல்கிறது. எனவே இரவில் வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. யானை, காட்டெருமை, கரடி, புலி மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகள் இந்தப் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சில நேரங்களில் காணப்படுகின்றன. தே. நெ. 181 ஊட்டிக்குப் பிறகு குன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை வழியாகக் கோயம்புத்தூர் நகரில் முடிகிறது.
நெடுஞ்சாலை எண் | ஆரம்பம் | இலக்கு | வழி |
---|---|---|---|
181 | கோயம்புத்தூர் | குண்டலுப்பேட்டை | காரமடை, மேட்டுப்பாளையம், குன்னூர், உதகமண்டலம், முதுமலை புலிகள் காப்பகம் (தெப்பக்காடு) . |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.