தேசிய நெடுஞ்சாலை 179ஏ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 179ஏ | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 141 km (88 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | சேலம் | |||
வடக்கு முடிவு: | வாணியம்பாடி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 179ஏ, பொதுவாக NH 179A (National Highway 179A (India)) எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் வருகிறது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 79-ன் துணைப் பாதையாகும்.[2] தே. நெ.179ஏ இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[3][4]
வழித்தடம்[தொகு]
சேலம், அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், வாணியம்பாடி.[1][3]
சந்திப்புகள்[தொகு]
தே.நெ. 79 சேலம் அருகில் முனையம்[1]
தே.நெ. 179B அரூர் அருகில் முனையம்
தே.நெ. 77 ஊத்தங்கரை அருகில்
தே.நெ. 48 முனையம் வாணியம்பாடி அருகில்[3]
திட்ட வளர்ச்சி[தொகு]
அரூரிலிருந்து வாணியம்பாடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை 179ஏ நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.[5] பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதியான சென்னை-சேலம் பசுமை வழி நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சேலத்திலிருந்து அரூர் வரை இச்சாலை உள்ளது.[6] பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் பசுமை வழி சாலை மத்திய நிதியுதவியுடன் கூடிய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் திட்டமாகும். இது 277.30 கி. மீ. நீளமுடையது. தே. நெ. 179பி தாம்பரம் முதல் அரூர் வரையிலும் தே. நெ. 179ஏ அரூரிலிருந்து சேலம் வரையிலும், தே. நெ. 132பி செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரையிலும், தே. நெ. 179டி செம்மம்பாடி முதல் சேத்துப்பட்டு வரையிலும் தே. நெ. 38 போளூரிலிருந்து திருவண்ணாமலை வரையிலும் திட்டமிடப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.[7][8][9]
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "New national highways notification for NH136 and NH179A". http://egazette.nic.in/WriteReadData/2017/176548.pdf.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India". http://www.egazette.nic.in/WriteReadData/2011/E_574_2012_016.pdf.
- ↑ 3.0 3.1 3.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". http://morth.nic.in/showfile.asp?lid=2924.
- ↑ "Three more State highways get upgraded". https://www.thehindu.com/todays-paper/three-more-state-highways-get-upgraded-as-nh/article19513337.ece.
- ↑ "Four Laning and Strengthening of the Salem - Thirupathur - Vaniyambadi stretch of NH-179A". http://infracon.nic.in/WriteReadData/consultantprojectsDPR/607_File0693123523.pdf.
- ↑ "Chennai-Salem road: NHAI to acquire 1,900 hectares of land.". https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-salem-road-nhai-to-acquire-1900-hectares-of-land/articleshow/64657674.cms.
- ↑ "Detailed project report". http://environmentclearance.nic.in/writereaddata/Online/additionalfile/23_Apr_2018_1211462108OEGAE6GKeyMap_opt.pdf.
- ↑ "Chennai-Salem Greenfield Corridor". https://www.thequint.com/news/india/activist-piyush-manush-arrested-salem-airport-expansion-protest.
- ↑ "Chennai-Salem Greenfield Corridor project.". https://www.thenewsminute.com/article/explainer-why-there-furore-over-proposed-chennai-salem-highway-82938.