தேசிய நெடுஞ்சாலை 75 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 75 | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சலை வரைபடம், சிவப்பு வண்ணத்தில் | ||||
![]() தே நெ 75 வழித்தடம், கர்நாடகாவில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 533 km (331 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | வந்தவாழ், கர்நாடகம் | |||
கிழக்கு முடிவு: | வேலூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | உப்பினாங்கடி, சக்லேஷ்பூர், ஹாசன், குனிகால், நெலமங்களா, பெங்களூரு, கோலார், முளுபாகிலு, வெங்கடகிரி கோட்டை, பேரணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 75 (National Highway 75 (India)) என்பது இந்தியாவின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். இது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[1][2] 2010ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை எண்களை மறு எண்ணிடும் முன்பு இந்த தேசிய நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை 48 (NH-48) என அறியப்பட்டது. மேற்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான மங்களூரை (மங்களூரு) கிழக்கில் வேலூர் நகரத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலை இதுவாகும்.[3] தே. நெ. 75 கர்நாடகா மாநிலத்தின் மூன்று புவியியல் பகுதிகளான கரவாலி, மலேநாடு மற்றும் பயலுசீமே வழியாகப் பயணிக்கிறது.[4]
பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைகள்
[தொகு]கர்நாடக மாநில சாலை 54 (பேலூர் சாலை), தேசிய நெடுஞ்சாலை 373, தேசிய நெடுஞ்சாலை 69
வழித்தடம்
[தொகு]
இது கர்நாடகா மாநிலத்தில் உள்ள வந்தவாழில் தொடங்கி நெல்லியடி, சீராடி காட், சக்லேஷ்பூர், ஹாசன், பெங்களூரு, கோலார், முளுபாகிலு, வெங்கடகிரி கோட்டை, பேரணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி வழியாகத் தமிழ்நாட்டின் வேலூரில் முடிவடையும்.[2]
மாநில வாரியாக பாதை நீளம் கி.மீ.[5]
- கர்நாடகா - 418.7 km (260.2 mi)
- ஆந்திரப் பிரதேசம் - 23.40 km (14.54 mi)[2]
- தமிழ்நாடு - 60.7 km (37.7 mi)
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 73 முனையம் பேண்ட்வால் அருகில்
தே.நெ. 275 பேண்ட்வால் அருகில்
தே.நெ. 373 ஹாசன் அருகில்
தே.நெ. 150A பேளூரில் குறுக்கீடு
தே.நெ. 48 நெலமங்களா அருகில்
தே.நெ. 44 ஹேபல் அருகில்
தே.நெ. 340 கோசுகோட் அருகில்
தே.நெ. 648 கோசுகோட் அருகில்
தே.நெ. 69 முள்பாகல் அருகில்
தே.நெ. 42 வேங்கடகிரி கோட்டை அருகில்
தே.நெ. 48 முனையம் வேலூர் அருகில்.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Retrieved 11 April 2019.
- ↑ 2.0 2.1 2.2 "List of National Highways passing through A.P. State". Roads and Buildings Department. Government of Andhra Pradesh. Archived from the original on 28 March 2016. Retrieved 11 February 2016.
- ↑ "National Highway 48". Maps of India. Retrieved 5 November 2019.
- ↑ "Shiradi ghat will be closed to heavy vehiclesfor six months". The Deccan Chronicle. Retrieved 1 Sep 2018.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா) India. Retrieved 11 April 2019.