மாநில நெடுஞ்சாலை 9 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 9 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 225 km (140 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கடலூர், தமிழ்நாடு | |||
முடிவு: | சித்தூர், ஆந்திரப் பிரதேசம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 207 km (129 mi), ஆந்திரப் பிரதேசம் :18 km (11 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 9 அல்லது எஸ்.எச்-9 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் என்னும் நகரையும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திராவின் சித்தூர் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்[1]. இச் சாலை தேசிய நெடுஞ்சாலை 45Aயில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை 4யில் முடிகிறது. 225 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தமிழ்நாடு 207 கி.மீ. நீளப் பகுதியையும், ஆந்திரப் பிரதேசம் 18 கி.மீ. நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன.
வழி
[தொகு]தமிழ்நாட்டில் நான்கு மாவட்டத்தில் உள்ள பல நகரங்களையும் ஊர்களையும் இச் சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாவட்டத்தில், இச் சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- கடலூர் : கடலூர் மாநகரம், நெல்லிக்குப்பம் நகரம், மேல் பட்டாம்பக்கம், பண்ருட்டி நகரம், திருவாமூர்.
- கள்ளக்குறிச்சி: மடப்பட்டு, பெரிய செவலை, திருக்கோவிலூர் நகரம்.
- திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரம்,கலசப்பாக்கம்,போளூர், கண்ணமங்கலம்.
- வேலூர்: வேலூர் மாநகரம், காட்பாடி நகரம்.
இச்சாலை திருவண்ணாமலை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 38 னுடன் இணைந்து வேலூர் வழியாக செல்கிறது எஸ் அச் 9 சாலை
நெடுஞ்சாலைச் சந்திப்புக்கள்
[தொகு]மாநில நெடுஞ்சாலை 9, தேசிய நெடுஞ்சாலை 45C ஐ பண்ணுருட்டி என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 45 ஐ மடப்பட்டு என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 66 ஐ திருவண்ணாமலை என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 46 ஐ வேலூரிலும் குறுக்கே வெட்டிச் செல்கின்றது.
மேலும் இச் சாலை பல மாநில நெடுஞ்சாலைகளையும் குறுக்கே வெட்டிச் செல்கின்றது. அவற்றுள் குறிப்பிட்ட சில சாலைகள் கீழே தரப்பட்டுள்ளன.
- மாநில நெடுஞ்சாலை 68 ஐ பண்ணுருட்டில்
- மாநில நெடுஞ்சாலை 69 ஐ பெரிய செவலையில்
- மாநில நெடுஞ்சாலை 68 ஐ திருக்கோவிலூரில்
- மாநில நெடுஞ்சாலை 7 ஐ திருக்கோவிலூரில்
- மாநில நெடுஞ்சாலை 135 ஐ திருவண்ணாமலையில்
- மாநில நெடுஞ்சாலை 237A செங்கம் - போளூர் - ஆரணி
- மாநில நெடுஞ்சாலை 239 படவேடு - ஆரணி
- மாநில நெடுஞ்சாலை 132 வேலூர் - ஆரணி
- மாநில நெடுஞ்சாலை 115 ஐ போளூரில்
- மாநில நெடுஞ்சாலை 59 ஐ காட்பாடியில்
இச் சாலை குறுக்கே வெட்டிச் செல்கின்றது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. Retrieved 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புகள்
[தொகு]- விபரமான நிலப்படம் (ஆங்கில மொழியில்)