கலசப்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலசப்பாக்கம்
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
கலசப்பாக்கம்
இருப்பிடம்: கலசப்பாக்கம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°26′N 79°04′E / 12.43°N 79.07°E / 12.43; 79.07ஆள்கூற்று: 12°26′N 79°04′E / 12.43°N 79.07°E / 12.43; 79.07
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
வட்டம் கலசப்பாக்கம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]
நகராட்சித் தலைவர்
ஆணையர்
மக்கள் தொகை

அடர்த்தி

31,000 (2001)

3,444/km2 (8,920/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

9.0 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi)

134 மீட்டர்கள் (440 ft)

கலசப்பாக்கம் (ஆங்கிலம்:kalasapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டம் மற்றும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும்.


அமைவிடம்[தொகு]

கலசப்பாக்கம் நகரம் கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் - தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடக்கே போளூர் 10 கி.மீ தொலைவிலும், ஆரணி 35 கிமீ தொலைவிலும் மற்றும் வேலூர் 58 கிமீ தொலைவிலும், தெற்கில் மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலை 26 கிமீ தொலைவிலும், மேற்கே செங்கம் 43 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி கலசபாக்கம்-பூண்டி வருவாய் நகரில் 31,000 மக்கள் வாழ்கிறார்கள் . 


== போக்குவரத்து வசதிகள் ===[தொகு]

கலசப்பாக்கத்தில் போக்குவரத்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர், மற்றும் ஆரணி, போளூர் மற்றும் செய்யாறிலிருந்து திருவண்ணாமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும். அதுமட்டுமின்றி குறிப்பாக, திருவண்ணாமலை, வேலூர், பெங்களூர், திருப்பூர், ஆரணி, சேலம், திருப்பதி, கோயம்புத்தூர், ஒகேனக்கல், செங்கம், செய்யாறு, சேத்பட், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செஞ்சி, ஆத்தூர், திருச்சி, சிதம்பரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, பெரம்பலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், படவேடு, வந்தவாசி, உத்திரமேரூர், கண்ணமங்கலம் மற்றும் சாத்தனூர் அணை ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. அதுமட்டுமின்றி கிராமப்புறங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக துரிஞ்சிகுப்பம்,அவலூர்பேட்டை, பாடகம், மங்கலம், ஆதமங்கலம்புதூர், பர்வதமலை, மன்சுராபாத், இன்னும் அதிகப்படியான ஊர்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சிறப்பு[தொகு]

கலசப்பாக்கம் வட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி[தொகு]

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்றாகும். இது 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலசப்பாக்கம்&oldid=2804603" இருந்து மீள்விக்கப்பட்டது