மணமேல்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணமேல்குடி
—  தேர்வுநிலை பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 25,540 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மணமேல்குடி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி [4][5]. இங்கு மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஜெகதீஸ்வரார் கோயில் மற்றும் பட்டாபிராமசாமி கோயில் உள்ளது. மணமேல்குடி குலச்சிறை நாயனார் பிறந்த இடம் ஆகும். அறந்தாங்கியிலிருந்து 35-கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திருவிழா[தொகு]

ஆனித் திருமஞ்சனம் - 10 நாட்கள் - 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். மார்கழி திருவாதிரை (திருவெம்பாவை உற்சவம் - 10 நாள் - 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இந்த இரண்டு திருவிழாக்கள்தான் மிக முக்கியமானவை. இவற்றுள் ஆனிமாத உற்சவம் மகத்தானது. மாணிக்கவாசகரை முதன்மைப்படுத்தி இத்திருவிழாக்கள் நடைபெறும். திருவிழாக்காலங்களில் இடபம், திருத்தேர் முதலான வாகனங்களில் மாணிக்கவாசகர் திருவுலா வருகிறார்.

அரசியல்[தொகு]

மணமேல்குடி பேரூராட்சியானது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கும்...இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டதாகும்

மக்கட்தொகை[தொகு]

மத அடிப்படையில்
Religion Percent(%)
இந்து
55%%
முஸ்லிம்
43.50%%
கிறித்தவர்
1.48%
Buddhist
0.01%
Other
0.1%


சுற்றுலாத்தளம்[தொகு]

மணமேல்குடியிலிருந்து 3 கிமீ தொலைவில் கோடியக்கரை சுற்றுலாத்தளம் அமைந்துள்ளது...பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சற்று கூட்டமாக காணப்படும் ...இதன் தெற்கே அம்மாப்பட்டினம் துறைமுகம் அமைந்துள்ளது...சற்று தள்ளி கோடியக்கரை தர்ஹாவும் அமைந்துள்ளது....முந்திரிக்காடு...சவுக்கை மரங்கள்...ஆர் எஸ் பதி மரங்கள் போன்றவை இயற்கை எழில் சூழும் வகையில் உள்ளன.

தலச்சிறப்பு[தொகு]

இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போல கொடுங்கைகள் (தாழ்வாரம்) அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து கம்பிகள் இணைக்கப்பட்டு, அதில் ஆணி அடிக்கப்பட்டது போல இவை இருகிறது. இதுதவிர தியாகராஜர் மண்டபத்தில் உள்ள கல்சங்கிலி, பஞ்சாட்சர மண்டபத்திலுள்ள சப்தஸ்வர தூண்கள் காணத்தக்கது. பெரிய மண்டபத்தில் உள்ள இரண்டு தூண்களில், ஆயிரம் சிறிய தூண்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2016-03-05 அன்று பரணிடப்பட்டது.
  5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=22&centcode=0009&tlkname=Avadaiyarkoil#MAP
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணமேல்குடி&oldid=3285240" இருந்து மீள்விக்கப்பட்டது