மாநகரப் போக்குவரத்துக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாநகரப் போக்குவரத்துக் கழகம்
நிறுவுகை 1972
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்துறை பொது போக்குவரத்து
தாய் நிறுவனம் பல்லவன் போக்குவரத்து கழகம் லிமிடெட்
இணையத்தளம் http://www.mtcbus.org/
MTC white line bus.jpg
MTC orange line bus.jpg
MTC new bus.jpg
MTC old bus.jpg
தொடர் பேருந்து
மாநகரப் பேருந்தின் வோல்வோ சேவை
மாநகரப் பேருந்தின் உள் தோற்றம்
புதிய சொகுசுப் பேருந்துகளின் இருக்கைகள்

மாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னை (Metropolitan Transport Corporation - MTC) சென்னை நகரில் இயங்கும் நகரப் பேருந்துகளின் துறையாகும். சென்னை மாநகரப் பேருந்துகள் ஒரு நாளைக்கு 42 இலட்சம் பயணிகளுக்கு சேவை புரிகின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மொத்தம் 3,365 பேருந்துகளை இயக்குகிறது. இப்பேருந்துகள் சென்னை நகரின் சுமார் 40 கி.மீ. வரை மக்களுக்கு சேவை புரிகின்றன.

தோற்றமும் வளர்ச்சியும்[தொகு]

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (மண்டலம் - I) 1 ஜனவரி 1972ம் ஆண்டு 1029 பேருந்துகளுடன் பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.[1] மேலும் பல்லவன் போக்குவரத்துக் கழகம் பிரிக்கப்பட்டு டாக்டர். அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் 19 ஜனவரி 1994 முதல் செயல்படத் தொடங்கியது. பின்னர் 1 ஜூலை 1997ல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - I), டாக்டர். அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - II) என்ற பெயரிலும் மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டன. பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக 10 ஜனவரி 2001ல் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - II) மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - I) உடன் இணைக்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

இன்று மொத்தம் 3,637 பேருந்துகள், 25 பணிமனைகள், குரோம்பேட்டையில் பேருந்து கட்டமைக்கும் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகரில் பயணச்சீட்டு அச்சிடும் பிரிவு மற்றும் பட்டுலாஸ் சாலையில் பழுதுபார்க்கும் பிரிவு ஆகியவை இயங்கிவருகின்றன. இத்துறையின் தலைமையகமான பல்லவன் இல்லம் எழும்பூரில் உள்ள பல்லவன் சாலையில் அமைந்துள்ளது.

பேருந்து சேவைகள்[தொகு]

வ.எண் பேருந்து வகை சேவை விளக்கம் குறைந்தபட்ச பயணக் கட்டணம் (ரூ.) + 4கிமீக்கு
1 வெள்ளைப் பலகை சாதாரண சேவை அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும் 3.00 + 1
2 பச்சைப் பலகை விரைவு சேவை சில முக்கியமான நிறுத்தங்களில் மட்டும் நிற்கும் 5.00
3 நீலப் பலகை சொகுசுப் பேருந்து அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும், வசதியான இருக்கைகள் 7.00
4 குளிர்சாதனப் பேருந்து அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும், வசதியான இருக்கைகள்
5 கரும் பலகை இரவு சேவை இரவு 10 மணிக்குப் பிறகு இருமடங்கு கட்டணம்(6.00,10.00,14.00)
6 பெண்கள் சிறப்புப் பேருந்து சாதாரண சேவை - கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களில்

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

பிற இணைப்புகள்[தொகு]