தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை என்பது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் எட்டு போக்குவரத்துக்கழங்களில் ஒன்றாகும்.
வரலாறு
[தொகு]1972 ஆம் ஆண்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இப்போக்குவரத்துக்கழகத்திலிருந்து 1974-ம் ஆண்டு 104 பேருந்துகள் பிரிக்கப்பட்டு கட்டப்பொம்மன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு இதிலிருந்து 62 பேருந்துகள் பிரிக்கப்பட்டு சோழன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. மேலும் 1986-ம் ஆண்டு 446 பேருந்துகள் பிரிக்கப்பட்டு இராணி மங்கம்மாள் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.
சேவை வழங்கும் மாவட்டங்கள்
[தொகு]இந்த மதுரை போக்குவரத்துக் கழகமானது நான்கு மாவட்டங்களில் மட்டுமே தனது சேவையை வழங்குகிறது. தமிழகத்தில் மற்ற அரசு போக்குவரத்து கழகங்கள் வருமானத்தை ஒப்பிடும் போது இந்த மதுரை போக்குவரத்து கழக வருமானம் குறைவாகவே காணப்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]- மாநகரப் போக்குவரத்து கழகம் - சென்னை
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி
ஆதாரங்கள்
[தொகு]தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை அலுவல் இணையதளம்