தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
TNPSC shown within Tamil Nadu | |
சுருக்கம் | TNPSC |
---|---|
உருவாக்கம் | 1929 |
வகை | அரசு |
நோக்கம் | அரசுப் பணிக்கு தேர்வு செய்தல் |
தலைமையகம் | சென்னை |
தலைமையகம் | |
ஆள்கூறுகள் | 13°03′56″N 80°15′16″E / 13.065683°N 80.254395°E |
சேவை பகுதி | தமிழ்நாடு |
தலைவர் | எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப |
செயலர் | கோபால சுந்தர ராஜ் இ.ஆ.ப |
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் | ஜான் லூயிஸ் இ.ஆ.ப |
பணிக்குழாம் | 400க்கும் அதிகமானவர்கள் |
வலைத்தளம் | tnpsc.gov.in |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957இல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது.[1]
அமைப்பு
[தொகு]தமிழக அரசால் ஏற்படுத்தப் பெற்ற இத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம்,1954 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.[2]
பணிகள்
[தொகு]தேர்வாணையம் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதன் விவரங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 320-இல் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய அளவில் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் செயல்படுவது போல் தமிழக அளவில் இது செயல்படுகிறது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இது போன்ற முதன்மைப் பணிகளுக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளைச் செய்கிறது.[3]
தலைவர்
[தொகு]தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு டாக்டர் பாலச்சந்திரன் இ. ஆ.ப கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார் அதன்பிறகு தற்போது வரை யாரும் நியமிக்கப்படவில்லை.[4]
வெளி இணைப்பு
[தொகு]- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம்
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விளக்கக் குறிப்பேடு பரணிடப்பட்டது 2009-04-07 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்விற்கான இலவச இணையதள பயிற்சி (online test for tnpsc exam)
- தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
- TNPSC Updates
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரலாறு". Archived from the original on 2020-07-20. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
- ↑ "TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION REGULATIONS, 1954" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2015-05-07.
- ↑ ஆங்கிலத்தில் TNPSC என்றால் என்ன
- ↑ http://www.tndipr.gov.in/DIPRImages/News_Attach/6665PDIPR-IASPOSTING-TNPSCCHAIRMAN-DATE12.10.2015.pdf[தொடர்பிழந்த இணைப்பு]