தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
Appearance
சுருக்கம் | SDAT |
---|---|
உருவாக்கம் | 1992 |
நோக்கம் | விளையாட்டு மேம்பாடு |
தலைமையகம் | சென்னை |
தலைமையகம் |
|
சேவை பகுதி | தமிழ்நாடு |
வலைத்தளம் | www |
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்பது தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ஆணையமாகும். தமிழ் நாட்டில் விளையாட்டினையும் உடல் தகுதியினையும் மேம்படுத்தவும் அரசு, விளையாட்டுச் சங்கங்கள் இதர விளையாட்டு அமைப்புகளின் வளங்களை ஒருங்கிணைக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.[1][2]
வரலாறு
[தொகு]விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் ஆகிய இரண்டையும் இணைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற புதிய அமைப்பு 1992 ஜூலை 18 அன்று உருவாக்கப்பட்டது.[3]
நோக்கங்கள்
[தொகு]- திறமை கொண்டவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல்
- மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளைஞர்களைத் தயார் செய்தல்
- போட்டிச் சூழலை உருவாக்கி உடல் தகுதியை மேம்படுத்தல், திறமைசாலிகளை அடையாளம் காணல், போட்டித்திறனை வளர்த்தல்
- விளையாட்டிற்கேற்ற உள்கட்டமைப்பை அமைத்து அனைத்து நிலை போட்டிகளுக்கும் தயார் செய்தல்
- வீரர்களுக்கான நவீன நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்க உரிய பயிற்சி, பயிலரங்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை அமைத்தல்
செயல்பாடுகள்
[தொகு]- ஒவ்வொரு விளையாட்டிற்கும் பயிற்சியாளரை நியமித்து இலவசப் பயிற்சி அளிக்கிறது.
- விளையாட்டுப் பள்ளிகள்,விடுதிகள் போன்றவற்றை நடத்துகிறது.
- இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உடற்திறனாய்வுகளை நடத்திப் பயிற்சி முகாம்களை நடத்துகிறது
- அண்ணா பிறாந்தநாளில் சைக்கிள் போட்டி நடத்துகிறது.
- முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளாவிலான போட்டிகளை நடத்துகிறது
- தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கம் வெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About SDAT". sdat.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
- ↑ "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும்: அரசு உத்தரவு". தினகரன். https://www.dinakaran.com/sports-association-tn-sports-development-authority-accreditation/. பார்த்த நாள்: 25 October 2023.
- ↑ "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் உதவிகள் என்னென்ன?". தினமணி. https://www.dinamani.com/sattamani/2019/jan/30/in-what-way-tamilnadu-sports-development-authority-helps-their-top-rank-players-3086121.html. பார்த்த நாள்: 25 October 2023.