அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் என்பது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓர் மிகப்பெரிய கிளை பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த போக்குவரத்து கழகக் கோட்டமே தமிழ்நாடு மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் மிகப்பெரிய அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டம் ஆகும். தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப்போக்குவரத்துக் கழகங்களிளேயே இக்கோட்டத்தின் தலைமையிடம் மட்டுமே ஒரு மாவட்டதின் தலைமையிடத்தில் அமையாமல் இருக்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் - கும்பகோணம்
வகைதமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை
நிறுவுகை1990
தலைமையகம், கும்பகோணம்
சேவை வழங்கும் பகுதிதமிழ் நாடு, அண்டை மாநிலங்கள்
தொழில்துறைஅரசுப் போக்குவரத்து பேருந்து
உற்பத்திகள்பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள்
துணை நிறுவனங்கள்
இணையத்தளம்[1]

தலைமையகம்[தொகு]

இக்கோட்டத்தின் தலைமையகம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இந்த பேருந்து போக்குவரத்து கழகத்தின் வாயிலாக

 • சாதாரண கட்டண பேருந்துகள்,
 • குளிர்சாதன பேருந்துகள்,
 • ORD பேருந்துகள்,
 • MFL பேருந்துகள்,
 • தஞ்சாவூர் , திருச்சி , கும்பகோணம் ஆகிய மூன்று மாநகரில் மட்டும் மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள்,
 • விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள்.

என கிட்டத்தட்ட 11,000 அதிகமான பேருந்துகளை இந்த கழகம் கொண்டுள்ளது. இது தமிழக போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் 49% பேருந்துகளை கொண்டுள்ளது.

சேவை வழங்கும் மாவட்டங்கள்[தொகு]

தென்னிந்திய மாநிலங்களிலேயே மிகப்பெரிய அரசுப் போக்குவரத்து கழகமாக கும்பகோணம் போக்குவரத்து கழகம் விளங்குகிறது. இந்த போக்குவரத்து கழகம் கீழ்கண்ட மாவட்டங்களிலும், தீவு பிரதேசத்திலும், யூனியன் பிரதேசத்திலும் தனது சேவையை வழங்குகிறது

ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவையை வழங்குகிறது. இது தவிர கோயம்புத்தூர், திருப்பூர்,ஈரோடு, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம், சென்னை ஆகிய முக்கிய மாவட்டங்களுக்கு அதிகமாக பேருந்துகளை இயக்குகிறது. இது தவிர மற்ற மாவட்டங்களுக்கு குறைவான பேருந்துகளை மட்டுமே இயக்குகிறது.

வரலாறு[தொகு]

அரசுப் பேருந்துகள் என்ற சிந்தனையோடு தனியார் பேருந்துகளை நாட்டுடைமையாக்கும் திட்டத்தை அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கலைஞர். கருணாநிதி கொண்டு வந்தபோது கும்பகோணத்தில் இயங்கிய தனியார் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு சோழன் போக்குவரத்துக்கழகமாக பரிணமித்தது. இதன் தலைமையகம் கும்பகோணத்தில் அமைந்தது.

1997 ஆம் ஆண்டு போக்குவரத்துக்கழகங்களில் இருந்த தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபோது சோழன் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) என்ற மாற்றப்பட்டது. தீரன் சின்னமலை. வீரன் அழகுமுத்துக்கோன், மருது பாண்டியர் ஆகிய போக்குவரத்துக் கழகங்களும் கும்பகோணத்துடன் இணைக்கப்பட்டன.

மண்டல அலுவலகங்கள்[தொகு]

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் - கும்பகோணம் கோட்டம் ஆறு மண்டலங்களுடன் இயங்கி வருகிறது.[1] அவை:

இவற்றின் தலைமை அலுவலகம் கும்பகோணம் ஆகும்.

போக்குவரத்து பணிமனைகள்[தொகு]

 • காரைக்கால் 1
 • காரைக்கால் 2
 • கும்பகோணம் புறநகர்,
 • கும்பகோணம் நகர் 1
 • கும்பகோணம் நகர் 2
 • தஞ்சாவூர் புறநகர்
 • தஞ்சாவூர் நகர் 1
 • தஞ்சாவூர் நகர் 2
 • திருவையாறு,
 • ஒரத்தநாடு,
 • பேராவூரணி,
 • பட்டுக்கோட்டை
 • நாகப்பட்டிணம் 1
 • நாகப்பட்டிணம் 2,
 • மயிலாடுதுறை புறநகர்,
 • மயிலாடுதுறை நகர்,
 • சீர்காழி,
 • சிதம்பரம்,
 • திருவாரூர்,
 • பொறையாறு,
 • காரைக்கால்,
 • வேதாரண்யம்,
 • மன்னார்குடி,
 • நன்னிலம்
 • திருச்சிராப்பள்ளி 1
 • திருச்சிராப்பள்ளி 2
 • திருச்சிராப்பள்ளி 3
 • மணப்பாறை
 • குளித்தலை
 • முசிறி
 • துறையூர்
 • அரியலூர் 1
 • அரியலூர் 2
 • ஜெயங்கொண்டம்
 • பெரம்பலூர் 1
 • பெரம்பலூர் 2
 • கரூர் 1
 • கரூர் 2
 • கரூர் 3
 • அரவக்குறிச்சி
 • புதுக்கோட்டை 1
 • புதுக்கோட்டை 2
 • ஆலங்குடி
 • பொன்னமராவதி
 • காரைக்குடி 1
 • இராமநாதபுரம் 1
 • இராமநாதபுரம் 2
 • இராமேஸ்வரம்
 • சிவகங்கை
 • காரைக்குடி 2
 • திருப்பத்தூர்
 • தேவகோட்டை
 • திருப்புவனம்
 • பரமக்குடி
 • கீழக்கரை
 • வேளாங்கண்ணி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை

 1. "Tnstc - Kumbakonam (kum)| Tamilvandi.Comhttps://www.instagram.com/tamilvandi_tnstc/". Tamilvandi.Com (in ஆங்கிலம்). 2021-10-15 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)