மதராசு மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை மருத்துவக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்னை மருத்துவக் கல்லூரி
Madras Medical College.JPG
வகை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
உருவாக்கம் 2 பிப்ரவரி 1835
துறைத்தலைவர் மரு.கனகசபை
அமைவிடம் சென்னை, இந்தியா
சேர்ப்பு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையத்தளம் www.mmc.tn.gov.in

சென்னை மருத்துவக் கல்லூரி (Madras Medical College) தமிழ்நாடு, சென்னையில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரி. இந்தியாவிலேயே பழமையான மருத்துவக்கல்லூரி என்ற பெருமையை கொல்கத்தா மருத்துவக் கல்லூரியோடு பகிர்ந்துகொள்கிறது. இது பெப்ரவரி 2, 1835 இல் நிறுவப்பட்டது.

சென்னை மருத்துவக்கல்லூரி என்று 1996இல் பெயர் மாற்றப்பட்டாலும்,ஆங்கிலத்தில் மதராஸ் மருத்துவக்கல்லூரி என்றே அழைக்கப்படுகின்றது.

வரலாறு[தொகு]

ஆங்கிலேய வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சை செய்வதற்காக 1665ஆம் ஆண்டு சென்னை அரசுப் பொது மருத்துவமனை தொடங்கப்பட்டது. செயின்ட். ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. இம்மருத்துவமனையில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க 1835ல் ஒரு மருத்துவப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தியர்கள் 1842 முதல் இக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.1850ல் கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது.அக்டோபர் 1 1950, முதல் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.1852இல் முதல் தொகுப்பு மாணவர்கள் பட்டம் பெற்றனர்.1857இல் மெட்ராஸ் பல்கலைக்கழக அங்கிகாரம் பெற்றது.உலகின் முதல் நான்கு பெண் மருத்துவர்களில் ஒருவரான மரு.மேரி சார்லலெப் 1878ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான மரு.முத்துலட்சுமி ரெட்டி இங்கு பயின்றவரே.2010 பிப்ரவரி 2இல் இக்கல்லூரி 175 ஆண்டுகள் மருத்துவம் பயிற்றுவித்த பெருமையை பெற்றது.