முக்தார் அகமது அன்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தார் அகமது அன்சாரி

முக்தார் அகமது அன்சாரி (Mukhtar Ahmed Ansari) (25 டிசம்பர் 1880 – 10 மே 1936) என்பவர் ஒரு மருத்துவரும், இந்திய தேசியவாதி மற்றும் அரசியல் தலைவராகவும், இந்திய சுதந்திர இயக்கத்தின் போது இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான அவர் 1928 முதல் 1936 வரை அதன் அதிபராக இருந்தார்.[1], [2]

பிறப்பும்- கல்வியும்[தொகு]

முக்தார் அகமது அன்சாரி 1880 டிசம்பர் 25 அன்று கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் யூசுப்பூர்-முகமதாபாத் நகரில் பிறந்தார்.[2]

அங்குள்ள விக்டோரியா பள்ளியில் படித்த அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தனர். பின்னர் மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். உதவித்தொகையின் மூலம் மேற்படிப்பிற்க்கு இங்கிலாந்து சென்றார். 1905 ஆண்டில் தேர்ந்த மருத்துவ நிபுணராணார் (M.D). 1910 ஆம் ஆண்டில் அன்சாரி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் (தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் பட்டம் (Master of Surgery) பெற்றார்.[3] உயர்மட்ட மாணவராக இருந்த அவர் லண்டன் லாக் மருத்துவமனை மற்றும் லண்டனில் உள்ள சாரிங் கிராஸ் மருத்துவமனையில் பணியாற்றினார். அவர் அறுவை சிகிச்சையில் ஒரு முன்னோடி இந்தியராக இருந்தார், இன்றும் லண்டனின் சாரிங் கிராஸ் மருத்துவமனையில் அவரின் நினைவாக அன்சாரி வார்டு என்று உள்ளது.[4]

இதையும் பார்க்க[தொகு]

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்

ஆதாரங்கள்[தொகு]

  1. Profile of Ahmed Ansari. Encyclopaedia Britannica
  2. 2.0 2.1 "Dr M A Ansari (1880–1936) president, Madras, 1927". Congress Sandesh, இந்திய தேசிய காங்கிரசு publication இம் மூலத்தில் இருந்து 7 March 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020307133839/http://www.congresssandesh.com/AICC/history/presidents/dr_m_a_ansari.htm. 
  3. Ansari, M.A. (1910). Treatment of syphilis by arylarsonates with special reference to recent research. PhD thesis, Edinburgh Medical School. 
  4. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/The-Ansari-connection/article15373664.ece%7Cதி ஹிந்து பத்திரிக்கை செய்தி