மருத்துவர் குருசாமி
எம். ஆர். குருசாமி முதலியார் M. R. Guruswami Mudaliar | |
---|---|
பிறப்பு | 1880 நீலமங்கலா, பெங்களூர் |
இறப்பு | 1958 (அகவை 77–78) கீழ்ப்பாக்கம், சென்னை |
அறியப்படுவது | மருத்துவம் |
மருத்துவர் குருசாமி அல்லது எம். ஆர். குருசாமி முதலியார் (Dr. M. R. Guruswami Mudaliar) (1880–1958) என்பவர் 20 ஆம் நூற்றாண்டின் முதற்பாதியில் சென்னையில் மருத்துவராகப் பணியாற்றியவராவார்.[1]
பிறப்பு
[தொகு]மருத்துவர் குருசாமி, கருநாடக மாநிலத்தில் பெங்களூரு அருகில் உள்ள நீலமங்கலா என்ற சிற்றூரில் பிறந்தார். இவர் 1880 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி பிறந்தார்.இவருடைய பெற்றோர் இராமசாமி முதலியார்; துர்கா அம்மையார் ஆவர்.[2]
கல்வி
[தொகு]மருத்துவர் குருசாமி மைசூரில் பள்ளிக்கல்வியை முடித்தார்.[3] உயர்நிலைப் பள்ளிப்படிப்பை சீரங்கப்பட்டணத்து பள்ளியில் படித்தார். பெங்களூர் சென்டிரல் கல்லூரியில் தன் இளங்கலைப் பட்டப்படிப்பையும், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்பும் பயின்றார். இராசகோபாலாச்சாரி இவரது கல்லூரி நண்பராவார்.[4][5]
சிறப்பு
[தொகு]மருத்துவர் குருசாமி அறுவை மருத்துவத் தேர்ச்சிக்கென சிப்பர் பீல்டு என்ற தங்கப் பதக்கம் பெற்றார். 1910 ஆம் ஆண்டு கதிரியக்கத் துறையில் சிறப்புப் பயிற்சியை டேராடூன் சென்று பெற்றார். 1916 ஆம் ஆண்டு மருந்தர் நிலைக்கு உயர்ந்தார். 1920 ஆம் ஆண்டு எம்.டி பட்டம் பெற்ற முதல் தமிழர் என்ற சிறப்பு பெற்றார். இதே ஆண்டு மருத்துவர் குருசாமி மெட்டீரியா மெடிக்கா என்ற மருத்துவ நூலின் பொறுப்பை ஏற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றார். சென்னைப் பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பொறுப்பேற்ற முதல் இந்தியரும் இவரே.
இறப்பு
[தொகு]1958 ஆம் ஆண்டு சூன் மாதம் 26 ஆம் தேதி மருத்துவர் குருசாமி மரணமடைந்தார்.
நினைவுச் சின்னங்கள்
[தொகு]- 1962 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியின் முகப்பில் மருத்துவர் குருசாமியின் முழுஉருவச்சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டது.[6]
- சென்னையில் சேத்துப்பட்டையும் கீழ்ப்பாக்கத்தையும் இணைக்கும் பாலம் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. சேத்துப்பட்டுப் பகுதியில் உள்ள மருத்துவர் குருசாமி சாலையும் இவரது நினைவுச் சின்னமாகும்.[7]
- இந்திய அஞ்சல் துறை இவரைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது.[8]
- டாக்டர் குருசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி, சென்னை 1, இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கோள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 2013-10-05. Retrieved 2013-10-02.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ தமிழ்,ஏழாம் வகுப்பு. உரைநடை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். 2007. pp. 111, 112, 113, 114.
- ↑ "எம்.ஆர்.குருசாமி முதலியார்". சனவரி 17. Retrieved 22 சூலை 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ C. R., Narasimhan. Rajagopalachari, a biography. ISBN 9788170271567.
- ↑ Rajagopalachari, C. V. Failure of Gandhism and Communism. C.V. Rajagopalachari, 1972.
- ↑ "We care for Madras that is Chennai". Madras Musings. Retrieved 2012-07-22.
- ↑ "சென்னை நகரில் அமைந்துள்ள அகமுடையார் பெருந்தகையாளர்களின் அடையாளங்கள்". 29 ஏப்ரல் 2016. Archived from the original on 2016-05-02. Retrieved 22 சூலை 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Special Cover – Dr M R Guruswamy Mudaliar". Indian Stamp Ghar. Archived from the original on 2015-09-24. Retrieved 2012-07-22.