உள்ளடக்கத்துக்குச் செல்

வி. மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர். வி. மோகன்
பிறப்புகேரளம்
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை
பணிநீரிழிவு நோய் மருத்துவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)
விருதுகள்பத்மசிறீ
மரு. பி. சி. ராய் விருது

வி. மோகன் (V. Mohan) என்பவர் இந்திய மருத்துவர்/அறிவியலாளர், நீரிழிவு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். இவர் மருத்துவர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவராக உள்ளார். இது நீரிழிவு சிகிச்சைக்கான பன்னாட்டு கூட்டமைப்பின் மையம் ஆகும்.[1] இவர் சென்னையிலுள்ள சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.[2] இது நீரிழிவு தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சிக்கான இந்திய மருத்துவ ஆய்வு குழும மையமாகும்.

கல்வி

[தொகு]

மருத்துவர் மோகன் தனது இளநிலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்வியை (பொது மருத்துவம்) மதராசு மருத்துவக் கல்லூரியில் முடித்தார். 1984-85-ல், இலண்டன், அரச் முதுநிலை மருத்துவப் பள்ளி மற்றும் ஹேமர்ஸ்மித் மருத்துவமனையில் வெல்கம் அறக்கட்டளை ஆராய்ச்சி உறுப்பினராகவும், 1985-86-ல் செருமனியின் உல்ம் பல்கலைக்கழகத்தில் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் சகாவாகவும் ஒரு வருடம் பணியாற்றினார். இவர் 1987-ல் முனைவர் மற்றும் பின்னர் 1997-ல் ஆய்வறிக்கை மூலம் அறிவியல் முனைவர் பைப்ரோகால்குலசு கணைய நீரிழிவு துறையில் ஆராய்ச்சிக்காக பெற்றார்.

விருது

[தொகு]
மருத்துவர் வி. மோகன் பத்மசிறீ விருது பெற்றபோது (2012)

மோகன், நீரிழிவு மருத்துவத் துறையில் செய்த சாதனைகளுக்காக இந்திய அரசின் பத்மசிறீ விருது உட்பட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.[3] 2018ஆம் ஆண்டில், இவர் அமெரிக்க நீரிழிவு சங்கத்திடமிருந்து நீரிழிவு நோய் குறித்த சேவைக்காகப் பன்னாட்டு விருதான மருத்துவர் கரோல்ட் ரிப்கின் விருதினையும் பெற்றார்.[4][5] மேலும் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவர் ஆவார்.[6] இந்திய மருத்துவ குழுவின் மருத்துவர் பி. சி. ராய் விருதையும் இவர் பெற்றவர்.[7] இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த அறிவியலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dr. Mohan's Diabetes Specialities Centre".
  2. "::Madras Diabetes Research Foundation::". www.mdrf.in.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  4. "2018 Harold Rifkin Award for Distinguished International Service in the Cause of Diabetes - Viswanathan Mohan, MD, PhD | American Diabetes Association".
  5. Piemonte, Lorenzo (23 July 2018). "Distinguished International Service awarded to advocate and doctor from India". பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
  6. "ADA awards Indian Doctor, Dr V Mohan for distinguished service in Diabetes". Medical Dialogues. 6 March 2018. https://medicaldialogues.in/ada-awards-indian-doctor-dr-v-mohan-for-distinguished-service-in-diabetes/. 
  7. "B.C. Roy awards for 55 doctors". தி இந்து (Chennai, India). 2 July 2008 இம் மூலத்தில் இருந்து 5 July 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080705124202/http://www.hindu.com/2008/07/02/stories/2008070260651700.htm. 
  8. "Dr V Mohan bags recognition as Tamil Nadu's topmost scientist". www.biospectrumindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
  9. "Dr.V. MOHAN RECOGNISED AS TAMIL NAdu's TOPMOST SCIENTIST – Medgate Today".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._மோகன்&oldid=3854415" இலிருந்து மீள்விக்கப்பட்டது