தண்டையார்பேட்டை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தண்டையார்பேட்டை | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மு. அருணா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 0 மீட்டர்கள் (0 அடி) |
தண்டையார்பேட்டை (Tondiarpet) அல்லது தொண்டியார்பேட்டை ஆனது இந்திய மாநகரம், சென்னையின் வடக்கில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியாகும். கடற்கரையின் ஒரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி முதன்மையான வணிக மையமாகத் திகழ்கிறது. தொழிற்சாலைகளும், முகமை நிறுவனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. பட்டு மற்றும் நகை ஏற்றுமதி நிறுவனங்களும் கூடுதலாக உள்ளன. சென்னையின் அனைத்துப் பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு வங்கிகளின் கிளைகளும் பள்ளிகளும் உள்ளன. மீன்பிடி துறைமுகமும் மீன்வள அலுவலகமும் இங்கு அமைந்துள்ளன.
பெயர்க்காரணம்[தொகு]
இந்த பகுதி ஒரு பிரபலமான பதினேழாம் நூற்றாண்டில் இசுலாமியத் துறவி குணங்குடி மஸ்தான் சாகிபு என்பவரால் பெயர் பெறுகிறது. குணங்குடி இராமநாதபுரம் மாவட்டத்தில், தொண்டி அருகில் அமைந்துள்ள அவரது பிறந்த இடம் ஆகும். அவர் சென்னை "லெப்பை காடு" என்ற இடத்தில் தவம் செய்தார். உள்ளூர் வாசிகள் "தொண்டி ஆவர் நாயகன்" என்ற பொருள் பட, அவரை "தொண்டியார்" அழைத்தனர். பின்னர், லெப்பை காடு, தொண்டியார்பேட்டை எனப்பட்டது. தொண்டியார்பேட்டை அருகில் இராயபுரம் அமைந்துள்ளது. ஹசரத் குணங்குடி மஸ்தான் சாஹிப் தர்காவில் எல்லா நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களும் செல்கின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.