தரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்னை தரமணியிலுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா

தரமணி, தென் சென்னையில் உள்ள இடமாகும். இங்கு டைடெல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, டைசல் உயிரித் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் பல மத்திய, மாநில அரசுக் கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அமைந்து உள்ளன. எம். ஜி. ஆர் திரைப்பட நகரும் சென்னை திரைப்படக் கல்லூரியும் இங்கு அமைந்துள்ளன. தரமணியில் பறக்கும் மின்சார தொடர் வண்டி நிலையம் உள்ளது. இதன் மூலம் பல கணினி தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு எளிதில் செல்ல முடிகிறது. இதன் அருகில் கந்தன்சாவடி, பெருங்குடி,அமெரிக்கன் பள்ளி, அரசு கனரக வாகன பயிற்சிப் பள்ளி ஆகியன உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரமணி&oldid=2300414" இருந்து மீள்விக்கப்பட்டது