மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நுழைவாயில்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute, CLRI) என்பது இந்திய அரசினால் தோல் ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்டது. உலகளவில் தோல் ஆராய்ச்சி தொடர்பான அதிக உரிமங்களையும் ஆய்வுத்தாள்களையும் கொண்டுள்ளது.[1][2] அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழுவின் கீழ் 1948 ஆம் ஆண்டு, 24 ஏப்பிரல் அன்று நிறுவப்பட்டது.[3]

செயற்பாடுகள்[தொகு]

தோல் தொழிற்சாலையின் வளர்ச்சியே இதன் முதன்மை நோக்கு. புதுமையான தோல் பதனிடும் தொழில் முறைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிறது.[4] தோல் பதனிடுதல் தொடர்பான பயிற்சிகளும் தொழினுட்ப உதவிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

இந்நிறுவனம் வேதியியல், உயிரியல், பொறியியல், தகவல் தொழினுட்பவியல் போன்ற பிரிவுகளையும் கொண்டுள்ளது. தலைமையகம் சென்னையிலும், மண்டல ஆய்வகங்கள் அகமதாபாத், ஜலந்தர், கான்பூர், கொல்கத்தாவிலும் உள்ளன.[5]

சான்றுகள்[தொகு]

  1. "Bioprocessing To Rid Leather of Environmental Hazards". தி பினான்சியல் எக்சுபிரசு. 16 பிப்பிரவரி 2004. http://www.financialexpress.com/news/bioprocessing-to-rid-leather-of-environmental-hazards/99760/. பார்த்த நாள்: 17 ஆகத்து 2012. 
  2. "CLRI signs MoU with UK university". Information Centre for Aerospace Science and Technology. Archived from the original on 2014-07-09. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2012.
  3. "CLRI – About Us". Central Leather Research Institute. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2012.
  4. Singer, Hans Wolfgang (1977). Technologies For Basic Needs, Volume 22. Geneva: பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு. பக். 150–151. http://books.google.co.in/books?id=stmmD5240foC&lpg=PP1&pg=PR4#v=onepage&q&f=false. 
  5. "CLRI – Departments". Central Leather Research Institute. பார்க்கப்பட்ட நாள் 17 August 2012.