ஆழ்வார் பேட்டை

ஆள்கூறுகள்: 13°02′02″N 80°14′55″E / 13.0339°N 80.2486°E / 13.0339; 80.2486
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்பேட்டை
புறநகர்ப் பகுதி
ஆழ்வார்பேட்டை is located in சென்னை
ஆழ்வார்பேட்டை
ஆழ்வார்பேட்டை
ஆழ்வார்பேட்டை(சென்னை)
ஆழ்வார்பேட்டை is located in தமிழ் நாடு
ஆழ்வார்பேட்டை
ஆழ்வார்பேட்டை
ஆழ்வார்பேட்டை (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°02′02″N 80°14′55″E / 13.0339°N 80.2486°E / 13.0339; 80.2486
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
புறநகர்சென்னை
மண்டலம்தேனாம்பேட்டை
அரசு
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600 018
வாகனப் பதிவுTN-06
மக்களவைத் தொகுதிதென் சென்னை
சட்டமன்றத் தொகுதிமயிலாப்பூர்

ஆழ்வார்பேட்டை (ஆங்கிலம்: Alwarpet), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும்.[3] இது சென்னையின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் இடமாக விளங்குகிறது. இதன் வடக்கு மற்றும் கிழக்கில் தேனாம்பேட்டை, கிழக்கில் மைலாப்பூர், மந்தைவெளி மற்றும் அபிராமபுரம், தெற்கில் ராஜா அண்ணாமலைபுரம், தென்மேற்கில் நந்தனம் ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள மெட்ரோ நிலையம் தேனாம்பேட்டை மெட்ரோ நிலையம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஆழ்வார்பேட்டைக்கான புதிய பிரத்யேக நிலையம் முன்மொழியப்பட்டுள்ளது, இது மார்ச் 2021 க்குள் இருக்கக்கூடும், மேலும் 5-7 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட் கிளப் மற்றும் போயஸ் கார்டன் போன்ற இரண்டு குடியிருப்புப் பகுதிகள் இங்கு உள்ளன. போயஸ்கார்டன் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மற்றும் பிரபல நடிகர் ரஜினிகாந்த்தின் இருப்பிடமாகும். போட் கிளப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரும், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என். ஸ்ரீனிவாசன் வசிக்கிறார். திரைப்பட நடிகர் கமலஹாசன் அலுவலகம் மற்றும் சங்கீத அகாடமி போன்றவை இங்கு உள்ளன. பார்க் செரடன் போன்ற நட்சத்திர விடுகள் இங்குதான் உள்ளது. ஆழ்வார்பேட்டை மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தை ஒட்டியுள்ள போட் கிளப் சாலை, இந்தியாவில் மூன்றாவது மிக விலையுயர்ந்த இடமாகவும், தென்னிந்தியாவில் மிகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது.

அமைவிடம்[தொகு]

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், ஆழ்வார்பேட்டை அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Alwarpet".



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்வார்_பேட்டை&oldid=3357519" இலிருந்து மீள்விக்கப்பட்டது