சுங்குவார்சத்திரம்
தோற்றம்
சுங்குவார்சத்திரம் | |
|---|---|
மின்னனியல் நகரம், சிப்காட் பகுதி | |
| அடைபெயர்(கள்): svc | |
| ஆள்கூறுகள்: 12°55′31″N 79°52′45″E / 12.9252°N 79.8791°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
| வட்டம் | திருபெரும்புதூர் |
| அரசு | |
| • மொலசூர் ஊராட்சி | ஏ சித்ரா |
| • சாந்தவேலூரு ஊராட்சி | கேஏசு. பாபு |
| • திருமங்கலம் ஊராட்சி | கே நரேஷ் |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 10,00,000 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| அசுஎ | 602106 |
| தொலைபேசி சுட்டெண் | 271 |
| வாகனப் பதிவு | TN-87 |
| நாடாளுமன்றத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சுங்குவார்சத்திரம் (Sunguvarchathiram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 48-இல் அமைந்துள்ளது. சுங்குவார்சத்திரத்தில் மாவு மில்கள் அதிகம். அதில் பழமையான மாவு மில் SDK Oil Mill and Flour Mill. இது காஞ்சிபுரத்திற்கு 25 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப்பெற்ற ஒரு தொழில் நகரமாகும்.[1] இங்கு மிகவும் பெயர்பெற்ற தொழிற்சாலைகளான மோட்டொரோலா கைபேசி நிறுவனம், சாம்சங் கைபேசி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் கைபேசிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான பாக்சுகான் போன்ற பல்வேறுதரப்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.[2] காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 25 மணித்துளிகள் பயணத்தில் இந்த ஊரகப்பாங்கான தொழில் நகரத்தை அடையலாம். இது பெருநகரச் சென்னைப் பகுதியில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சுங்குவார்சத்திரம் துணை மின் நிலையம் துவக்கம்". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/3228-. பார்த்த நாள்: 3 July 2024.
- ↑ "திருமணம் முடிந்த பெண்களுக்கு வேலை கிடையாது? - சர்ச்சைக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம்..", TimesNowTamil, 2024-06-28, retrieved 2024-07-03