உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயிரம்விளக்கு மசூதி

ஆள்கூறுகள்: 13°03′18″N 80°15′18″E / 13.0551°N 80.2551°E / 13.0551; 80.2551
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரம்விளக்கு மசூதி

ஆயிரம்விளக்கு மசூதி

அமைவிடம்: 13°03′18″N 80°15′18″E / 13.0551°N 80.2551°E / 13.0551; 80.2551
அமைவிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
நிறுவிய ஆண்டு 1810
கட்டிட வடிவமைப்புத் தகவல்
கட்டிட வடிவமைப்பு நவாப் உம்தத்-உல்-உம்ரா
கொள்ளளவு 1000
மாடங்கள் 5
கோபுரங்கள்) 2

ஆயிரம்விளக்கு மசூதி (ஆங்கிலம்: Thousand Lights Mosque) இந்தியாவில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள பல மாடங்களைக் கொண்ட மசூதியாகும். இது நாட்டில் உள்ள மிகப்பெரும் மசூதிகளில் ஒன்றாகும். இங்கு தமிழக சியா முசுலிம்களின் தலைமையகம் இயங்குகிறது. இதனை 1810ஆம் ஆண்டு நவாப் உம்தத்-உல்-உம்ரா கட்டியதாகத் தெரிகிறது.[1]

வரலாறு

[தொகு]

ஆயிரம்விளக்கு மசூதி 1810-ல் ஆற்காடு நவாப் உம்தாத் உல்-உமாராவால் கட்டப்பட்டது.[2][3] இது இடைக்கால கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும்.[2] இந்த மசூதி இருந்த இடம் முன்பு ஒரு சட்டசபை மண்டபத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. சபை மண்டபத்தை ஒளிரச் செய்ய ஆயிரம் எண்ணெய் விளக்குகளை ஏற்றும் வழக்கம் அன்று இருந்தது. அந்தப் பாரம்பரியத்தின் நீட்சியாகவே இம்மசூதிக்கு ஆயிரம்விளக்கு மசூதி என்று பெயரிடப்பட்டது.[4]

சென்னையின் தலைமை ஷியா காசி இம்மசூதியில் இருந்துதான் செயல்படுகிறார். தொடர்ந்து இப்பதவியை ஒரே குடும்பம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.[3]:128

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-26. Retrieved 2010-02-11.
  2. 2.0 2.1 Priya, R. Sasi Mary; Radhakrishnan, V. (March-April 2016). "The art and architectures along the Tamil Nadu coast". International Journal of Art & Humanity Science 3 (2): 43. பன்னாட்டுத் தர தொடர் எண்:2349-5235. https://www.researchgate.net/profile/Radhakrishnan-Dr-V/publication/313763972_The_art_and_architectures_along_the_Tamil_Nadu_coast/links/58a567fe92851cf0e3931539/The-art-and-architectures-along-the-Tamil-Nadu-coast.pdf. பார்த்த நாள்: 18 December 2021. 
  3. 3.0 3.1 Muthiah, S. (2008). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India. Vol. 1. Chennai: Palaniappa Brothers. p. 126. ISBN 9788183794688.
  4. DK Eyewitness Travel Guide India. Dorling Kindersley. 2017. ISBN 9780241326244.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரம்விளக்கு_மசூதி&oldid=4169115" இலிருந்து மீள்விக்கப்பட்டது