அஷ்டலெட்சுமி கோயில், சென்னை

ஆள்கூறுகள்: 12°59′33″N 80°16′14″E / 12.9925°N 80.2706°E / 12.9925; 80.2706
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஷ்டலட்சுமி கோவில் 2
அஷ்டலட்சுமி கோவில்
தீபாவளியின் போது கோவில் கோபுரம்

அஷ்டலட்சுமி கோயில் (Ashtalakshmi Kovil) சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் உள்ளது. அஷ்டலெட்சுமிகளுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் நான்கு நிலைகள் கொண்ட கோபுரங்களுடன் கூடியதாகும்.[1][2]

அட்ட (எட்டு) இலட்சுமிகளும் நான்குநிலைகளில் நிறுவப்பட்டுள்ளனர். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர். முதல்தளத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் உள்ளனர். கோயில் தரிசனத்தை இங்கிருந்தே துவக்குவர். சில படிகள் ஏறி மூன்றாம் தளமடைந்தால் அங்கு சந்தான லட்சுமி, விசயலட்சுமி வித்தியா லட்சுமி மற்றும் கசலட்சுமி சன்னதிகளைக் காணலாம். மேலேறினால் உள்ள நான்காம் தளத்தில் தனியாக உள்ள தனலட்சுமியைக் காணலாம்.[3]

வரலாறு[தொகு]

காஞ்சி சங்கர மடத்து பெரியவர் சந்திரசேகர சரசுவதி அவர்களின் விருப்பப்படி அட்டலட்சுமி கோயில் இக்கடற்கரையில் கட்ட 1974-ஆம் ஆண்டில் அடிக்கல் நடப்பட்டது.[1] 5 ஏப்ரல் 1976-இல் அகோபில மடத்தின் 44வது ஜீயர் வேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிகன் தலைமையில் அஷ்டலட்சுமி கோயில் குடமுழுக்குடன் நிறுவப்பட்டது.[4]

கோயில் அமைப்பு[தொகு]

அஷ்டலட்சுமி கோயில் 65 அடி நீளம், 45 அடி அகலம் கொண்டது. இலக்குமியின் அட்டலட்சுமி வடிவங்கள் கோபுரத்தின் நான்கு நிலைகளில் உள்ள ஒன்பது சன்னதிகளில் அமைத்துக் கட்டப்பட்டது. அட்டலட்சுமிகளைத் தவிர பத்து தசாவதார அவதாரங்களுக்கும் குருவாயூரப்பன், கணபதி, தன்வந்திரி மற்றும் அனுமன் சன்னதிகளும் உண்டு.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Astakalshmi temple". Indian heritage.com. March 2012. பார்க்கப்பட்ட நாள் 2 Dec 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. "Ashtalakshmi temple consecrated in Chennai". Deccan Chronicle (Chennai: Deccan Chronicle). 2 June 2012. http://www.deccanchronicle.com/channels/cities/chennai/ashtalakshmi-temple-consecrated-chennai-718. பார்த்த நாள்: 2 Dec 2012. 
  3. "Sri Ashtalakshmi temple". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2014.
  4. திருக்கோயில்கள் வழிகாட்டி: சென்னை மாவட்டம் (in Tamil) (1st ed.). Chennai: Government of Tamil Nadu, Department of Hinduism. July 2014. pp. 30–33.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ashtalakshmi Temple, Chennai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.