மாதம்பாக்கம்

ஆள்கூறுகள்: 12°51′N 80°03′E / 12.85°N 80.05°E / 12.85; 80.05
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதம்பாக்கம்
மாதம்பாக்கம்
இருப்பிடம்: மாதம்பாக்கம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°51′N 80°03′E / 12.85°N 80.05°E / 12.85; 80.05
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் தாம்பரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

31,681 (2011)

3,950/km2 (10,230/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8.02 சதுர கிலோமீட்டர்கள் (3.10 sq mi)

29 மீட்டர்கள் (95 அடி)

இணையதளம் www.townpanchayat.in/madambakkam

மாதம்பாக்கம் (ஆங்கிலம்:Madambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இப்பேருராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சோழர் கால தேனுபுரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா மார்ச் மாதத்தில் 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்[தொகு]

3 நவம்பர் 2021 அன்று இந்த பேரூராட்சியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

மாதம்பாக்கம் பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 46 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 11 கிமீ தொலைவில் உள்ள தாம்பரத்தில் உள்ளது. இதன் கிழக்கில் பள்ளிக்கரணை 11 கிமீ; மேற்கில் சேலையூர் 3 கிமீ; வடக்கில் செம்பாக்கம் நகராட்சி 2 கிமீ மற்றும் தெற்கில் அகரம் ஊராட்சி 2 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

8.02 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 609 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,069 வீடுகளும், 31,681 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 92.47% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 971 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°51′N 80°03′E / 12.85°N 80.05°E / 12.85; 80.05 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 29 மீட்டர் (95 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. மாடம்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Madambakka Population Census 2011
  5. "Madambakkam". Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/25/Madambakkam.html. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதம்பாக்கம்&oldid=3594766" இருந்து மீள்விக்கப்பட்டது