பல்லாவரம் வட்டம்
Appearance
பல்லாவரம் வட்டம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பல்லாவரம் நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் குன்றத்தூர், மாங்காடு, பல்லாவரம், பம்மல் என 4 உள்வட்டங்களும், 27 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் பல்லாவரம் வட்டத்தில் உள்ளது. பல்லாவரம் வட்டத்தின் பெரும்பகுதிகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லையை ஒட்டியுள்ளது.
சென்னை மாவட்டத்தின் ஆலந்தூர் வட்டத்தில் இருந்த மூவரசம்பட்டை தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்லாவரம் வட்டத்தில் உள்ள பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]