வி.ஜி.பி. யூனிவர்சல் கிங்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜிபி யூனிவர்சல் கிங்டம் (VGP Universal Kingdom) என்பது தமிழ்நாட்டின் சென்னையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பொழுதுபோக்குப் பூங்கா ஆகும். இந்தப் பூங்கா துவக்கக் காலத்தில் சிறிய சவாரிகள் வழங்கும் பூங்காவாக இருந்தது. 1997 ஆம் ஆண்டு முழு நீள கேளிக்கை பூங்காவாக 1997 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.[1] இந்தப் பூங்கா குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோருக்கு பல வேடிக்கை மற்றும் சாகச சவாரிகளை வழங்குகிறது. விஜிபி 2000 புத்தாயிரம் ஆண்டு கோபுரம், நீர் அருவிகள், பன்னீர் கோட்டை போன்றவை இங்கு உள்ள முதன்மை அம்சங்களாகும். இந்தப் பூங்கா விஜிபி குழுமத்தைச் சேர்ந்தது. இந்தக் குழுமத்தை நிறுவியவர் வி ஜி பன்னீர்தாஸ் ஆவார். இதன் மேலாண் இயக்குநர் வி.ஜி. ரவிதாஸ் ஆவார்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]