தாம்பரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாம்பரம் வட்டம் , தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தாம்பரம் நகரம் உள்ளது. இவ்வட்டத்தின் கீழ் மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம் மற்றும் தாம்பரம் என 3 உள்வட்டங்களும், 20 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]இவ்வட்டத்தில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. அகரம் தென்
 2. சிட்லப்பாக்கம்
 3. கௌரிவாக்கம்
 4. இரும்புலியூர்
 5. கடப்பேரி
 6. கஸ்பாபுரம்
 7. கோவில்சேரி
 8. மாடம்பாக்கம்
 9. மதுரப்பாக்கம்
 10. முடிச்சூர்
 11. மூலச்சேரி
 12. பீர்க்கன்கரணை
 13. பெருங்களத்தூர்
 14. இராஜகிழ்ப்பாக்கம்
 15. சேலையூர்
 16. செம்பாக்கம்
 17. திருவாஞ்சேரி
 18. தாம்பரம்
 19. வெங்கம்பாக்கம்
 20. புலிக்கொறடு

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 383,718 ஆகும். அதில் 194,083 ஆண்களும், 189,635 பெண்களும் உள்ளனர். 98,067 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 7.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 92.03% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 39732 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 964 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 54,289 மற்றும் 3,523 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.08% , இசுலாமியர்கள் 5.17% , கிறித்தவர்கள் 10.99% மற்றும் பிறர் 0.71% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்பரம்_வட்டம்&oldid=3097351" இருந்து மீள்விக்கப்பட்டது