பீர்க்கன்கரணை
பீர்க்கன்கரணை | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | தாம்பரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
25,871 (2011[update]) • 4,061/km2 (10,518/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 1.786 சதுர கிலோமீட்டர்கள் (0.690 sq mi) |
பீர்க்கன்கரணை (ஆங்கிலம்:Peerkankaranai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டததில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இப்பகுதி சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்
[தொகு]3 நவம்பர் 2021 அன்று இந்த பகுதியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
அமைவிடம்
[தொகு]பீர்க்கன்கரணை பகுதி மாவட்டத் தலைமையிடமான காஞ்சிபுரத்திலிருந்து 40 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் உள்ள தொடருந்து நிலையம், 2.5 கிமீ தொலைவில் உள்ள அ பெருங்களத்தூர் ஆகும். இதனருகில் வண்டலூர் 3 கிமீ; கிழக்கு தாம்பரம் 3.50 கிமீ; பழைய பெருங்களத்தூர் 2.40 கிமீ தொலைவில் உள்ளது.
பகுதியின் அமைப்பு
[தொகு]1.786 சகிமீ பரப்பும், 244 தெருக்களையும் கொண்ட இப்பகுதி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 25,871 மக்கள்தொகை கொண்டது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 47.7% ஆகவுயர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 92% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13% மற்றும் 1% ஆக உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு கிமீ 4061 நபர் வீதம் வாழ்கின்றனர்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ More areas to come under Chennai Corporation
- ↑ Peerkankaranai Population Census 2011
- ↑ Peerkankaranai Town Panchayat