செய்யூர் சட்டமன்றத் தொகுதி
செய்யூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் |
மொத்த வாக்காளர்கள் | 2,27,402[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | விடுதலை சிறுத்தைகள் கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
செய்யூர் சட்டமன்றத் தொகுதி (Cheyyur Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 34.
செய்யூர் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தனித் தொகுதியாகவும், முழுவதும் கிராமங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது.
மதுராந்தகம் பொதுத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட லத்தூர் ஊராட்சி ஒன்றியம், அச்சிறுபாக்கம் தொகுதியிலிருந்து நீக்கப்பட்ட சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் 46 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதி 2011-ல் உருவாக்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை கிராமங்கள் பலவும் செய்யூர் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், கடபாக்கத்தில் கிழக்கு கடற்கரை ஒட்டி உள்ள பழங்கால ஆலம்பரை கோட்டை, முதலியார் குப்பத்தில் உள்ள அரசின் படகு குழாம் கல்பாக்கம் அனுமின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன.
இத்தொகுதியில் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 41 ஊராட்சிகள், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகள், இடைக்கழி நாடு பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகள், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் வாக்காளர்கள் மொத்தம்- 2,26,346. அதில் ஆண்கள்- 1,11,270, பெண்கள்- 1,15,019 மற்றும் 3-ம் பாலினம்- 57 ஆக உள்ளனர். அதிமுக சார்பில் எஸ். கனிதா சம்பத், திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]கிளாப்பாக்கம், பெரும்பேடு, அம்மணம்பாக்கம் (ஆர்.எப்), குன்னவாக்கம், வீராபுரம், வெங்கம்பாக்கம், ஆரம்பாக்கம், பூந்தண்டலம், குடிபெரும்பாக்கம், பேரம்பாக்கம், அமிஞ்சிக்கரை, பெரியகாட்டுப்பாக்கம், நடுவக்கரை, பாக்கம், பாண்டூர், வெள்ளப்பந்தல், வழுவாதூர், திம்மூர், வள்ளிபுரம், விளாகம், எடையாத்தூர், இரும்புலிச்சேரி, தேப்பனாம்பட்டு, அட்டவட்டம், நெரும்பூர், சின்னக்காட்டுப்பாக்கம், அங்கமாம்பட்டு, சிட்லம்பாக்கம், புன்னப்பட்டு, சோமாஸ்ப்பட்டு, சோலைக்குப்பம், இளையனார்குப்பம், விட்டலாபுரம் மி, விட்டலாபுரம் -மிமி, மேற்காண்டை, லட்டூர், சூராடிமங்கலம், கொந்தகாரிக்குப்பம், பனங்காட்டுசேரி, பொம்மராஜபுரம், நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வசுவசமுத்திரம், வயலூர் மற்றும் வெங்காடு கிராமங்கள்,
புதுப்பட்டிணம் (சென்சஸ் டவுன்)[3]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | வி. எஸ். ராஜி | அதிமுக | 78,307 | 55.59 | பார்வேந்தன் | விசிக | 51,723 | 36.72 |
2016 | டாக்டர் ஆர். டி. அரசு | திமுக | 63,446 | 37.92 | ஏ. முனுசாமி | அதிமுக | 63,142 | 37.74 |
2021 | பனையூர் பாபு | விசிக | 82,750 | 55.59 | ச. கனிதா சம்பத் | அதிமுக | 78,708 | 36.72 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
- ↑ விசிக நேருக்குநேர் போட்டியிடும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்:செய்யூர் தொகுதி கண்ணோட்டம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 9 சனவரி 2016.