விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விடுதலை சிறுத்தைகள் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தலைவர்தொல். திருமாவளவன்
பொதுச்செயலாளர்இரவிக்குமார்
தொடக்கம்1982 - மலைச்சாமி என்பவரால் ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் தமிழக கிளையாக தொடங்கப்பட்டது.
கொள்கைசாதி ஒழிப்பே மக்கள் விடுதலை
தமிழ்த் தேசியம்
சனாதன ஒழிப்பு
கூட்டணி1) விசிக - மூன்றாவது அணி (2004-2006)
2) தமாகா - (விசிக சந்தித்த முதல் தேர்தல் 1999-2001)
3) திமுக-பாஜக (தேஜகூ) (2001-2004)
4) அதிமுக-(ஜனநாயக மக்கள் கூட்டணி) : (2006-2009)
5) திமுக-காங்கிரஸ் (ஐமுகூ) (2009-2014) & (2017-தற்போது வரை)
6) திமுக-(ஜனநாயக முற்போக்குக் கூட்டணி) : (2014-2015)
7) மக்கள் நலக் கூட்டணி (2015-2016)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 543
இணையதளம்
http://www.vck.in/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers or Viduthalai Siruthikal katchi) தமிழ்நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.[1][2] இக்கட்சி தலித் மக்களின் பிரச்சினைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல். திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல்.திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் ஏற்றினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார்.

கொடி[தொகு]

விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும், சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் 1990 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் நாள் ஏற்றினார்.[3]

தேர்தல் வெற்றிகள்[தொகு]

தமிழகத்தின் 13 ஆவது சட்டமன்றத்தில், இக்கட்சி 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மங்களூர் தொகுதியில் செல்வப்பெருந்தகையும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் டி. இரவிக்குமார் என்பவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் 4.6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021[தொகு]

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆறு தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆர். முத்துக்குமார், தொகுப்பாசிரியர் (2010). தமிழக அரசியல் வரலாறு - பாகம் - 2. கிழக்கு பதிப்பகம். https://books.google.co.in/books?id=5ZldDwAAQBAJ&pg=PT499&dq=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjx8KL06ovvAhXQF3IKHaEqDPgQ6AEwAHoECAMQAw#v=onepage&q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&f=false. 
  2. Andrew Wyatt, தொகுப்பாசிரியர் (2010). Party System Change in South India: Political Entrepreneurs, Patterns and Processes. Routledge. http://books.google.co.in/books?id=u82MAgAAQBAJ&pg=PT151&dq=dalit+panther+malaisamy&hl=en&sa=X&ei=wBqkU9GcGM7HuATd1oBY&ved=0CB8QuwUwAA#v=onepage&q=dalit%20panther%20malaisamy&f=false. 
  3. அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!-சூனியர் விகடன் 2015 மே 3
  4. வி.சி.க.விற்கு 6 தொகுதிகள்: தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு - தினமணி நாளிதழ் செய்தி (04-3-2021)

வெளி இணைப்புகள்[தொகு]