சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி என்பது சம்மு காசுமீர் மாநில அரசியல் கட்சியாகும். 1998இல் இதை முன்னாள் உள்துறை அமைச்சரான முப்தி முகமது சயீத் தொடங்கினார்[1]. இக்கட்சி அக்டோபர் 2002இல் மாநில ஆட்சியைக் கைப்பற்றியது. 2004 மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தலா ஒரு உறுப்பினரைக் கொண்டிருந்ததுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் 2009 வரை பங்கு பெற்றது. [2]

தற்போது இக்கட்சியின் தலைவராக மெகபூபா முப்தி உள்ளார்,[3]. முப்தி முகமது சையது சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சியும் காங்கிரசும் இணைந்த கூட்டணி அரசுக்கு அக்டோபர் 2002 முதல் நவம்பர் 2005 வரை தலைமையேற்று முதல்வராகப் பணியாற்றினார். [4]

சம்மு காசுமீர் மக்களின் சனநாயகக் கட்சி தற்சார்பு அரசு (இறையாண்மையுடைய அரசு) என்ற கொள்கையுடையது. இது தன்னாட்சி என்பதிலிருந்து வேறுபாடானது. இது இறையாண்மையுடைய அரசு என்ற அரசியல் தத்துவத்தை நம்பும் கட்சியாகும். சம்மு காசுமீர் மக்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்பதில் இது உறுதியாய் உள்ளது. சம்மு காசுமீருக்கு புதிய அரசியல் அதிகாரங்கள் கிடைப்பதற்காகப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகிறது.[5] 2014 மக்களவைத் தேர்தலில் இக்கட்சி மூன்று தொகுதிகளில் வென்றது. 2014 சட்டமன்ற தேர்தலில் 28 தொகுதிகளில் வென்று அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக உள்ளது.[6][7]

2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மெகபூபா முப்தி அனந்நாக் மக்களவை தொகுதியில் இருந்தும் 2014ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முப்தி முகமது சையது அனந்நாக் சட்டமன்ற தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முப்தி முகமது சையது பிப்ரவரி 28, 2015 அன்று சம்மு காசுமீர் மாநில முதல்வராகப் பதவியேற்றார்.

மேற்கோள்கள்[தொகு]