உள்ளடக்கத்துக்குச் செல்

மெகபூபா முப்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெகபூபா முப்தி
محبوبہ مُفتی
பத்தாவது சம்மு காசுமீர் முதலமைச்சர்
பதவியில்
4 ஏப்ரல் 2016 – 20 சூன் 2018
ஆளுநர்நரீந்தர் நாத் வோரா
முன்னையவர்முப்தி முகமது சயீத்
பின்னவர்காலி
நாடளுமன்ற உறுப்பினர், அனந்தநாக் நாடாளுமன்ற தொகுதி, சம்மு காசுமீர்
பதவியில்
2004–09, 2014 – 2018
முன்னையவர்மிர்சா மெகபூப் பெக்
பதவியில்
16 May 2004 – 16 May 2009
முன்னையவர்மிர்சா மெகபூப் பெக்
பின்னவர்அலி முகமது நாய்க்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 மே 1959 (1959-05-22) (அகவை 65)
அக்ரான் நவ்போரா அனந்தநாக், சம்மு காசுமீர், இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிசம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
துணைவர்சாவத் இக்பால்
பிள்ளைகள்2
உறவினர்கள்முப்தி முகமது சயீத் (father)
வாழிடம்(s)சோன்வார், ஸ்ரீநகர்
முன்னாள் கல்லூரிசட்டப் படிப்பு, காஷ்மீர் பல்கலைக் கழகம், ஸ்ரீநகர்
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்www.jkpdp.org
மூலம்: [1]

மெகபூபா முப்தி (Mehbooba Mufti) (பிறப்பு: 22 மே 1959 ) இந்தியாவின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பத்தாவது மற்றும் கடைசி முதலமைச்சராக 4 ஏப்ரல் 2016 அன்று பதவி ஏற்றவர். இவர் அனந்தநாக்கின் அக்ரான் நவ்போரா கிராமத்தில் 1959ம் ஆண்டில் பிறந்தவர். தற்போது ஜம்மு காஷ்மீர் மக்களின் சனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில ஒரே பெண் முதல்வரும் ஆவார்.[1][2] முன்னாள் இந்திய நடுவண் அரசின் உள்துறை அமைச்சரும், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான இவரது தந்தை முப்தி முகமது சையத், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் 1 மார்ச்சு 2016 அன்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராகப் பதவி ஏற்றார்.[3]

இவரது சகோதரி ருபையா என்பவர் 1989ம் ஆண்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். மெகபூபா 14வது மக்களவையில் (2004-2009) அனந்தநாக் நாடளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[4] மீண்டும் 2014ம் ஆண்டில் அதே தொகுதியில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருக்கு இல்டிஜா மற்றும் இர்டிகா என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்த பின் தன் கணவரை திருமணமுறிவு செய்துவிட்டு தனியாக அரசியல் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பிஜ்பெகரா சட்டமன்ற தொகுதியிலிருந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டில் முப்தி முகமது சையத் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ஜம்மு காஷ்மீர் மக்களின் சனநாயக கட்சியை அமைக்கும் போது, மெகபூபா முப்தி அக்கட்சியின் துணைத் தலைவரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. முதல் பெண் முதல்வர் ஆகிறார் மெஹபூபா
  2. Profile of Fourteenth Lok Sabha Members[தொடர்பிழந்த இணைப்பு], accessed 2008-07-26
  3. http://www.firstpost.com/politics/mufti-mohammed-sayeed-to-take-oath-as-jk-cm-but-kashmiris-furious-with-bjp-deal-2121381.html
  4. "Jammu and Kashmir People's Democratic Party". பார்க்கப்பட்ட நாள் 24 March 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகபூபா_முப்தி&oldid=3958436" இலிருந்து மீள்விக்கப்பட்டது