திராவிடர் கழகம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திராவிடர் கழகம் என்பது பெரியாரால் சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும். இதுவே முதலாவது திராவிடக் கட்சி. இக்கட்சி தற்காலத் தமிழ்நாட்டின் வரலாற்றைச் செதுக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. தற்போது முந்திய வீச்சு இல்லாவிடினும் தொடந்து செயற்பட்டு வருகிறது. எடுத்துகாட்டாக மூடநம்பிக்கைகளைப் பரிசோதனை முறையில் முறியடிப்பது இவர்கள் மேற்கொள்ளும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை ஆகும். கழகத்தின் தற்போதைய தலைவர் கி. வீரமணி ஆவார்.